சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிற்பகல் 80.. மிட்நைட் 70.. எடப்பாடி வீட்டிற்கு அடுத்தடுத்து சென்ற கார்கள்! நேற்று இரவு என்ன நடந்தது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ள நிலையில் நேற்று இரவோடு இரவாக அதிமுக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்துள்ளார்.

Recommended Video

    டிடிவிய கோர்ட்ல நிக்க வச்சுருவோம்! சந்தர்ப்பவாதி சசிகலா..யார் சொல்றது தெரியுமா? கே.பி.முனுசாமி தான்!

    அதிமுகவில் இன்று மிக முக்கியமான நாள். ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமின் ஆதரவாளர் சண்முகம் தொடுத்த அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.

    உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    உச்சக்கட்ட டென்ஷன்.. ஓபிஎஸ் ரெடியாமே.. பொதுக்குழுவுக்கு உச்சக்கட்ட டென்ஷன்.. ஓபிஎஸ் ரெடியாமே.. பொதுக்குழுவுக்கு

    உயர் நீதிமன்ற உத்தரவு

    உயர் நீதிமன்ற உத்தரவு

    அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அவமதிப்பு வழக்கு

    அவமதிப்பு வழக்கு

    இதில் அவமதிப்பு வழக்கு மட்டும் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக நேற்று பிற்பகலில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். வழக்கில் என்ன செய்யலாம்... அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் சிக்கல் ஆகுமே.. என்ன மாதிரியான பாயிண்டுகளை வைப்பது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார்.

    ஆலோசனை

    ஆலோசனை

    நேற்று பிற்பகல் மட்டும் 80 நிமிடம் இந்த ஆலோசனை நடந்துள்ளது. அதன்பின் மீண்டும் நேற்று நள்ளிரவில் மீண்டும் 70 நிமிடங்கள் ஆலோசனை நடந்துள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான மணியான நிர்வாகிகளும், சென்னையை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், சட்ட பின்னணி கொண்ட முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி வீட்டிற்கு தனி தனி காரில் சென்றுள்ளனர். இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில் நேற்று 70 நிமிடங்கள் இதை பற்றி ஆலோசனை செய்துள்ளனர்.

     ஓ பன்னீர்செல்வம்

    ஓ பன்னீர்செல்வம்

    ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் சண்முகம் தொடுத்துள்ள இந்த வழக்கில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பொதுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த அவமதிப்பு வழக்கில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    இந்த நிலையில், அப்படி எதுவும் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதா என்று இதில் நீண்ட நேரம் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். ஓ பன்னீர்செல்வத்திற்கு சட்ட ரீதியாக சில சாதகமான சூழ்நிலை நிலவுவதே இந்த மீட்டிங்கிற்கு காரணம் என்கிறார்கள். இதில் எடப்பாடிக்காக ஆஜராக போகும் வழக்கறிஞர்கள், அவர்களின் டீம் இருந்துள்ளது. கோர்டில் தாக்கல் செய்யப்பட உள்ள ஆவணங்களை படித்து காட்டி சரி பார்த்து உள்ளனர். இதன் காரணமாக இன்று நடக்கும் விசாரணையில் எடப்பாடி தரப்பு முக்கியமான சில பாயிண்டுகளை எடுத்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Why did Edappadi Palanisamy meet his supporters twice in a day yesterday? அதிமுக பொதுக்குழு தொடர்பான அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ள நிலையில் நேற்று இரவோடு இரவாக அதிமுக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X