இப்படி ஒரு காரணமா? ராகுல் காந்தி பற்றி வாயை திறக்காத எடப்பாடி.. அதிமுக ஆடும் வித்தியாசமான கேம்!
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் பற்றி அதிமுக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதில் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்க முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எடப்பாடி
ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி மட்டும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்வதாக கருதப்படும் கட்சி அதிமுக. அப்படிப்பட்ட அதிமுகவின் முகமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தை பற்றி பேசவில்லை, ஒரு போஸ்ட் கூட செய்யவில்லை. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மௌனம் காக்க முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி இரண்டு விஷயங்களை மனதில் வைத்து மௌனம் காத்ததாக கூறுகிறார்கள் அதிமுகவினர்.

விஷயம் 1
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை. சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் இந்த விவகாரத்தில் கருத்து சொன்னால் அது பாஜகவை மேலும் அதிமுக மீது கோபம் அடைய செய்யும். இரண்டு தரப்பிற்கான உறவில் மேலும் விரிசல் ஏற்படும். அப்படி நடக்க வேண்டாம் என்பதற்காக எடப்பாடி இதில் ராகுலை ஆதரிக்கவில்லை என்றார்கள்.

விஷயம் 2
இன்னொரு பக்கம் தீர்ப்பை ஆதரித்து பேசினால் காங்கிரஸ் கட்சி கடுப்பாகும். காங்கிரஸ் உடனான கூட்டணி முடிவிற்கு சிக்கல் ஏற்படும். சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும் என்றார். அதன்பின் சிவி சண்முகம் திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள். விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் இனி திமுகவிற்கு தேவை இல்லை. அவர்களை திமுக கழற்றிவிட போகிறது.

காங்கிரஸ்
திமுகவிற்கு பிரஷர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள், இல்லை என்றால் காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று பிரஷர் கொடுத்து வருகின்றனர் என்று கூறி இருந்தார். இதனால் தமிழ்நாட்டில் எங்கே காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அமையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான வாய்ப்புகள் இப்போதும் கூட உள்ள நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இந்த தீர்ப்பை ஆதரித்து பேசி காங்கிரசின் கோபத்திற்கு ஆளாகவில்லை. அதனால்தான் இந்த விவகாரத்தில் அதிமுக அமைதியாக இருந்தது என்கிறார்கள்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications