Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதான் சங்கதியா! ராஜதந்திரமாக விட்டுத்தந்த எடப்பாடி! "தர்மரை" இறக்கிய ஓபிஎஸ்! ஸ்கெட்ச் சசிகலாவிற்காமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் தருமரை ராஜ்ய சபா வேட்பாளராக தேர்வு செய்ததற்கு பின் பல்வேறு அரசியல் வியூகங்கள் காரணமாக இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள். எடப்பாடி பல விஷயங்களை ஆலோசனை செய்து இந்த முடிவிற்கு ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும்.. பொதுவாக கட்சியில் எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகளில் அவருடைய கையே ஓங்கி இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தரும் ஆட்களுக்குதான் கட்சியில் பதவிகள் வழங்கப்படும்.

சட்டசபை வேட்பாளர் தேர்விலும் சரி, உள்ளாட்சி தேர்தலிலும் சரி, கட்சி அளவில் நடந்த மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலிலும் சரி எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கி இருந்ததில்லை.

விட்டுக்கொடுக்க மாட்டார்

விட்டுக்கொடுக்க மாட்டார்

சமீபத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான ஆட்களே அதிகம் தேர்வானார்கள். அவரும் கூட அதிமுகவை மீண்டும் ஒற்றை தலைமை நோக்கி நகர்த்தி செல்கிறாரோ. கட்சியின் ஒற்றை தலைவராக அவர் உருவெடுக்க போகிறாரோ என்ற கேள்வியை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக சார்பாக ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதுகளத்தூர் தர்மர் பெயர் இடம்பெற்றுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

பொதுவாக இது போன்ற பெரிய பதவிகள் சமீப காலங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சென்றது இல்லை. ஓபிஎஸ் கை இதில் ஓங்கியதே இல்லை. ஆனால் இந்த முறை ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான தர்மருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மரின் தேர்விற்கு பின் ஓபிஎஸ் மட்டுமில்லை எடப்பாடியும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தர்மரை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுத்துவிட்டார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

வன்னியர் முன்னுரிமை

வன்னியர் முன்னுரிமை

சில விஷயங்களை மனதில் வைத்து எடப்பாடி இப்படி விட்டுக்கொடுத்ததாக தெரிகிறது. அதன்படி ஒரு எம்பி பதவிக்கு சிவி சண்முகம் தேர்வாகிவிட்டார். அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். தன்னுடைய அணியை சேர்ந்தவர். அதனால் அவரை தேர்வு செய்ததில் எடப்பாடி ஏக குஷியில் இருக்கிறார். ஆனால் வன்னியரை தேர்வு செய்ததால் ஏற்கனவே அதிமுகவில் விரக்தியில் இருக்கும் முக்குலத்தோர் கோபம் அடைவார்கள். இதற்கு முன்பே சட்டசபை தேர்தலில் இது சிக்கல் ஆனது.

 தப்பான அர்த்தம் ஆகிவிடும்

தப்பான அர்த்தம் ஆகிவிடும்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர் திரும்பினர். இதனால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் திமுக பக்கம் சென்றது. தற்போது அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவும் இந்த முக்குலத்தோர் வாக்குகளைத்தான் குறி வைத்து இருக்கிறார். முக்குலத்தோர் தலைவர்கள் மூலம் மீண்டும் கட்சியை மீட்கலாம் என்று சசிகலா நினைக்கிறாராம். அங்க வன்னியர் கவுண்டருக்குத்தான் மதிப்பு.. உங்களுக்கு இல்லை என்று முக்குலத்தோரை தன் பக்கம் இழுக்க நினைக்கிறாராம்.

முக்குலத்தோர் பிரிவு ஹாப்பி

முக்குலத்தோர் பிரிவு ஹாப்பி

இதன் காரணமாக ஒரு சீட்டில் முக்குலத்தோர் போட்டியிடட்டும் என்று எடப்பாடி நினைக்கிறாராம். இதனால்தான் ஓபிஎஸ் விருப்பப்படியே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த தருமரை களமிறக்க எடப்பாடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் முக்குலத்தோர் மீண்டும் அதிமுக பக்கம் பார்வையை திருப்புவார்கள் என்று எடப்பாடி நம்புகிறாராம். தர்மரை களமிறக்குவதன் மூலம் எடப்பாடி இன்னொரு வகையில் பலன் அடைய முடியும் என்றும் நினைக்கிறாராம்.

 ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

அரசியலில் நீண்ட கால நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை என்பார்கள். இப்போது தருமர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமாக இருக்கிறார். தர்ம யுத்தம் டைமில் இருந்து அவருடன் தருமர் இருக்கிறார். இப்போது தருமரை எம்பி ஆக்கி, அவரை வளர்ந்துவிட்டால் வரும் காலத்தில் முக்குலத்தோர் பிரிவில் ஓபிஎஸ்ஸை விட தருமர் பெரிதாக வருவார்.. அதன் மூலம் ஓபிஎஸ் மவுசை குறைக்கலாம் என்று எடப்பாடி தரப்பு பிளான் போட வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். எதிர்காலத்தில் தருமரை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி கேம்ப் முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+