வன்னியர் வாக்கு வழுக்கிக்கிட்டு போயிடும்.. வந்த எச்சரிக்கை.. பங்காருவிற்கு பறந்த எடப்பாடி.. ஷாக்கிங்
சென்னை: பங்காரு அடிகளார் சமீபத்தில் மறைந்தார். அவரது நினைவிடமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய சித்தர் பீடத்திற்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி வணங்கினார். இதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய சித்தர் பீடத்திற்கு எடப்பாடி சென்ற போது, அவருடன் அதிமுக நிர்வாகிகள் பெரும் படையுடன் சென்றிருந்தனர். அடிகளாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார் எடப்பாடி. அவரது மகனிடம், ''எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் '' என்று சொல்லிவிட்டு மேல்மருவத்தூரில் இருந்து கிளம்பினார் எடப்பாடி.

பங்காரு அடிகளார் நினைவிடத்துக்கு எடப்பாடி வந்ததில் ஒரு பின்னணி இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர். தலைமைக் கழக நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, ''அடிகளாரின் மறைவு செய்தியை கேட்டு மேல்மருவத்தூருக்கு கிளம்பி வந்த முதல்வர் ஸ்டாலின் தொடங்கி தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். கட்சி வேறுபாடு இல்லாமல் பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதை பலரும் உன்னிப்பாக கவனித்தனர்.
மோடி பயணம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள், நடிகர், நடிகையர் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஆனால், எடப்பாடி மட்டும் உடனடியாக நேரில் வரவில்லை. அவர் நினைத்திருந்தால் உடனே வந்திருக்க முடியும். ஆனால், வராமல் இருந்தார். அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதில் ஏனோ அவருக்கு உடன்பாடில்லாமல்தான் இருந்ததாம். அப்போது, அதிமுகவில் உள்ள வன்னியர் சமூகத்தினர், தேவர் ஜெயந்திக்கு எந்த வருடமும் நேரில் நீங்கள் செல்லவில்லை.
ஆனா, இந்த வருடம் நீங்கள் அங்கு போகிறீர்கள். முக்குலத்தோர் சமூகத்தை திருப்திப்படுத்த இந்த முடிவை எடுக்கிறீர்கள். ஆனால் வன்னியர் சமூகம் கொண்டாடும் அடிகளாரின் மறைவுக்கு எல்லா தலைவர்கள் வந்தும் நீங்கள் வராமல் இருப்பது நமக்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கியில் வன்னியர் சமூகத்தினர் கணிசமாக இருக்கிறார்கள். அப்படியிருக்கையில், முக்குலத்தோரை திருப்திப்படுத்த தேவர் ஜெயந்திக்கு நீங்கள் செல்வதாக முடிவெடுக்கும் போது வன்னியர் சமூகத்தை சேர்ந்த அடிகளாரை வணங்காமல் இருப்பது வன்னியர் சமூகம் இதனை அரசியலாக்கும் வாய்ப்பு இருக்கு.
வன்னியர் வாக்குகள்: அதனால், மேல்மருவத்தூருக்கு நீங்கள் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது சரியான விசயம் தான் என உணர்ந்த எடப்பாடி, மேல்மருவத்தூருக்கு சென்று அடிகளார் நினைவிடத்தை வணங்கும் முடிவை எடுத்தாராம். இதுதான் அவரது வருகையின் பின்னணி'' என்று அதிமுக தலைமைக்கழகத்தினரிடம் எதிரொலிக்கிறது.
மறைவு: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். 82 வயதாகும் பங்காரு அடிகளார் முன் மாலை மரணம் அடைந்தார். முக்கியமாக இதயவலி காரணமாக அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த வாரம் வியாழன் அன்றும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.
பங்காரு அடிகளார்: இதை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடம் இயங்கி வருகிறது. இந்திய பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார்.
ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்தவர் என்று அழைக்கப்பட்டவர் இவர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார்.ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.
பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். முக்கியமாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் பலர் இவரை தீவிரமாக பின்பற்றி வந்தனர். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications