"வளர்த்த கடா".. ஓஹோ.. வளர்மதியின் பேச்சுக்கு இதான் காரணமா.. எல்லாம் "அவர்" தந்த தைரியம்தானாமே..!
வளர்மதி சசிகலாவை அட்டாக் செய்து பேட்டி தர என்ன காரணம்
சென்னை: முன்னாள் அமைச்சர் வளர்மதி, சசிகலாவை அளவுக்கு அதிகமாகவே அட்டாக் செய்து பேசியதுதான், தற்போது அதிமுகவில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
Recommended Video
கடந்த பல மாதங்களாகவே, சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர போவதில்லை என்பதில் அதிமுக சீனியர்கள் உறுதியாக சொல்லி வருகிறார்கள்.
ஆனாலும், சமீபத்தில் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா, சசிகலாவை நேரில் சந்தித்து பேசியதும், திடீரென ஒரு பரபரப்பு கட்சிக்குள் தொற்றிக் கொண்டது..

ஓ.ராஜா
ஓ.ராஜாவை கட்சியில் இருந்து வேறு வழியின்றி நீக்கம் தொடர்பான அறிவிப்பில், ஓபிஎஸ் கையெழுத்து போட்டார் என்றாலும், சசிகலா குறித்த அவரது உண்மை நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், மார்ச் 8ம் தேதி மகளிர் தினவிழா, எம்ஜிஆர் மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது... கேக் வெட்டி ஒருவருக்கொருவர் தலைவர்கள் ஊட்டி விட்டுக் கொண்டனர்..

கோகுல இந்திரா
அதிலும், எடப்பாடி பழனிசாமி வளர்மதிக்கு கேக் ஊட்டிவிட, ஓபிஎஸ் கோகுல இந்திராவுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர்... இதற்கு பிறகு திமுகவின் மகளிர் அணி மாநில செயலாளர் பா.வளர்மதியிடம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம் சசிகலா இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்..

வளர்மதி
அதற்கு வளர்மதி, "அதிமுகவில் இருபெரும் தலைவர்கள் இருக்கிறார்கள்.. முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கிறது. சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுப்படி நடப்போம்" என்றார்.. உடனே செய்தியாளர்கள், சசிகலாவின் இணைப்பை நீங்கள் ஆதரிப்பீர்களா? என்று கேட்டனர். அதற்கு வளர்மதி, "ஊடகங்கள் எதையாவது கேட்டு, எங்களை இப்படி கோர்த்துவிடாதீர்கள்.. இதுபோன்ற விஷயங்களில் லிங்க் செய்துடாதீங்க" என்றார்.

எம்ஜிஆர்
இந்நிலையில் நேற்றும்கூட சசிகலா பற்றி ஒரு கருத்தை உதிர்த்துள்ளார் வளர்மதி.. சசிகலா பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதிமுகவின் தலைமை ஒபிஎஸ், இபிஎஸ் மட்டுமே, அவர்கள் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வோம் ரோட்டில் செல்பவர்களை தலைமையாக ஏற்க முடியாது.. எம்ஜிஆர் கை காட்டிய இடத்தில்தான் அதிமுக தற்போது உள்ளது" என்று கூறியுள்ளார்.. ரோட்டில் போகிறவர்களை எல்லாம் தலைமையாக ஏற்க முடியாது என்று வளர்மதி பேசியதுதான், பல்வேறு அதிருப்திகளையும், வருத்தங்களையும் அவர் மீது பெற்று தந்துள்ளது.

வளர்மதி பேச்சு
ஜெயலலிதாவை விட சசிகலா மீது தான் கடந்த 25 ஆண்டுகாலமாக பக்தியாக இருந்தார் வளர்மதி. அமைச்சராக இருந்த போது, ஜெயலலிதாவை சந்தித்ததை விட சசியை சந்தித்ததுதான் அதிகம். சசியின் கட்டளைக்குத்தான் கீழ் படிந்து அரசியல் பணிகளை அப்போது முன்னெடுத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் நின்றார். காரணம், அப்போது ஆட்சி கட்டிலில் அதிமுக இருந்ததும், தமிழ்நாடு பாடநூல்கழகத்தின் சேர்மனாக வளர்மதி இருந்தததும் தான்.

விமர்சனம்
அப்போது கூட சசிகலாவை பற்றி கடுமையாக அவர் விமர்சித்ததில்லை. அப்படியிருந்த வளர்மதி இன்றைக்கு இவ்வளவு மோசமாக சசிகலாவை அட்டாக் பண்ணுகிறாரே என்று சசி ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். வளர்மதியின் இத்தகைய பேச்சுக்கு பின்னால் அதிமுகவின் உள்கட்சித் தேர்தல் இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடியின் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருக்கும் வளர்மதி, உள்கட்சி தேர்தலில் மாநில பொறுப்புகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுகிற போது, கட்சியின் அவைத்தலைவர் பதவிக்கு வரவேண்டும் என விரும்புகிறார். மேலும், கட்சியின் வழிகாட்டும் குழுவும் மாற்றியமைக்கப்படவிருக்கிறது. அவைத்தலைவர் பதவியோடு வழிகாட்டும் குழுவிலும் தான் இடம் பெற வேண்டும் என்றும் விரும்புகிறாராம். அதனால்தான் சசிகலா எதிர்ப்பில் வேகம் காட்டுகிறார் என்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications