ஸ்டாலின் ஜப்பான் செல்ல.. பாதியில் திரும்பி வந்த இறையன்பு.. என்ன நடந்தது சிங்கப்பூரில்? பரபர பின்னணி
சென்னை: முதல்வருடன் ஜப்பான் பயணத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு செல்லாமல், சிங்கப்பூர் பயணத்தோடு அவர் சென்னைக்கு திரும்பி விட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பேசு பொருளாகியிருக்கிறது.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23 ஆம் தேதி புறப்பட்டு சென்றார்.

அவருடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்கள் உமாநாத், அனுஜார்ஜ், தொழில்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றிருந்தனர். சிங்கப்பூரில் முதல்வருடன் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்ட வெ.இறையன்பு, அங்கிருந்து முதல்வருடன் ஜப்பான் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை திரும்பி விட்டார்.
தொழில்துறைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஆகியோர் முதலமைச்சருடன் சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் சென்றிருக்கின்றனர். தலைமைச் செயலாளர் இறையன்பு முதல்வருடன் ஜப்பான் செல்லாததன் காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதனால் இந்த விஷயம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பேசு பொருளானது.
ஆட்சி தலைவர் முதல்வரும், நிர்வாகத்திற்கு தலைமையான தலைமைச் செயலாளரும் ஒரே சமயத்தில் அதிக நாட்கள் வெளிநாட்டு பயணத்தில் இருக்க வேண்டாம் என்பதால், முதல்வரின் வெளிநாட்டு பயண ஏற்பாடுகளின் போதே ஜப்பான் பயணத்திற்காக இறையன்புவுக்கு விசா அப்ளை செய்யவில்லை.
சிங்கப்பூர் பயணத்தில் மட்டும் இருந்தால் போதும் என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தான் சென்னை திரும்பினார் என்கிறது அதிகாரிகள் தரப்பு. அதே சமயம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டும் இதனால் கவனம் பெற்றுள்ளது.
ரெய்டு:
தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 இடங்களில் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர். அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் ஒருவரின் வீடுகளில் ரெய்டு நடக்கும் போது தலைமை செயலாளர் ஊரில் இருக்க வேண்டும் என்பதற்காக இறையன்பு திரும்பி வந்தாரா என்ற கேள்வியும் இன்னொரு பக்கம் எழுந்துள்ளது. ஆனால் ரெய்டுக்கு முன்பே இறையன்புவிற்கு விசா அப்ளை செய்யவில்லை என்பதால் இது காரணமாக இருக்காது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
ஓய்வு :
தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இவரின் இடத்தை நிரப்ப போகும் அந்த அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இறையன்பு பெரும்பாலும் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப்படலாம். அதாவது ஓய்வு பெற்ற பின் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications