பிசிறு, தனி கோஷ்டி..பொதுச்செயலாளர் பதவிக்கு அடம்.. காளியம்மாள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய சீமான்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் அறியப்பட்ட பெண் தலைவரான, மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் இன்று அக்கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள், புகார்களை தொடர்ந்து கூறி வந்த நிலையில் இன்று காளியம்மாள் அந்த கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களில் சமூக செயற்பாட்டாளராக இருந்த காளியம்மாள், 6 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் காளியம்மாள். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியின் பெண் தலைவராகவும் உருவெடுத்தார்.

அத்துடன் நாகை, மயிலாடுதுறை உட்பட கடலோர கிராமங்களில் தமக்கான ஆதரவாளர்களையும் ஒருங்கிணைத்திருந்தார் காளியம்மாள். இதனால் சீமான் கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக சக நிர்வாகிகளிடம் பேசிய சீமான், காளியம்மாள் என்கிற ஒரு பிசிறு இருக்கிறது.. அதனையும் தட்டிவிட வேண்டியதுதான் என கூறியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து சீமானுடனான நிகழ்ச்சிகளில் காளியம்மாள் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சீமானுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய காளியம்மாள், பிரபாகரனுடன் 12 நிமிடம்தான் சீமான் பேசினார்; சுயநல அரசியலை கைவிட்டு இனநலன் அரசியலை முன்னெடுங்கள் எனவும் பேச அதே மேடையிலேயே காளியம்மாளுக்கு பதில் கொடுத்தார் சீமான்.
இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி மேடைகளில் காளியம்மாள் பேசவும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் காளியம்மாள் பிரசாரம் செய்யவில்லை. அப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சீமான், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கேட்டு காளியம்மாள் அடம்பிடிப்பதாக கூறி இருந்தார்; அத்துடன் காசு கொடுத்து தனக்கான தனி கூட்டத்தை சேர்த்து வருகிறார்; அவர் என்ன செய்கிறார் என்பதை கண்காணிப்பதா எங்களுக்கு வேலை? விருப்பம் இருந்தால் தொடரட்டும்; தொல்லையாக இருக்கக் கூடாது என பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாக, காளியம்மாள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலும், இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. என்றே சீமான் பதிலளித்து வந்தார். சீமானே கட்சியை விட்டு வெளியே போ என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக பேட்டி கொடுத்த நிலையில்தான் இன்று நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவதாக காளியம்மாள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications