மேயர் ப்ரியாவா இது? டிரெஸ்சிங்கே மாறிடுச்சே.. அடையாளமே தெரியலையே.. இத்தாலியில் என்ன பண்றாங்க?
சென்னை: சென்னை மேயர் ப்ரியா இத்தாலியில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இத்தாலி: சென்னை மேயர் ப்ரியா இத்தாலியில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை போன்ற வளர்ந்து கொண்டே வரும் பெருநகரங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை ஒரு பெரிய சவாலாகவே விளங்கி வருகிறது.
வளர்ந்த நாடுகளில் திடக்கழிவு மேலாண்மையை எப்படி செயல்படுத்துகின்றனர் என்று பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு மேயர் ப்ரியா இன்று ரோம் நகரில் இத்தாலி நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் டாட் கோராடோ கிளினி (Mr.Dott Corrado Clini) சந்தித்து காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது மதிப்பிற்குரிய துணை மேயர். மகேஷ் குமார் கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத் இ.ஆ.ப., மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பொறியாளர்கள் உடனிருந்தனர். அதன்பின் அவர்கள் ரோம் நகரில் உள்ள உர்பேசர் கழிவு சேகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளை பார்வையிட்டனர், என்று குறிப்பிட்டு உள்ளனர்.
மாடர்ன் உடையில் மேயர் ப்ரியா அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருப்பது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சென்னை சாலையில் குப்பை போடுபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை போன்ற வளர்ந்து கொண்டே வரும் பெருநகரங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை ஒரு பெரிய சவாலாகவே விளங்கி வருகிறது. வளர்ந்த நாடுகளில் திடக்கழிவு மேலாண்மையை எப்படி செயல்படுத்துகின்றனர் என்று பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள (1/4) pic.twitter.com/aSAaOR8lBA
— Greater Chennai Corporation (@chennaicorp) June 19, 2023
சாலையில் குப்பை போட கூடாது. குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும். வீட்டில் இருக்கும் குப்பைகளை காலையில் வரும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் மட்டுமே போட வேண்டும். வெளியே பொது இடங்களில் வீச கூடாது என்று சென்னை மாநகராட்சி கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக அதிகாரிகளை நியமித்து குப்பை போடுபவர்களையும், விதிகளை மீறுபவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.












Click it and Unblock the Notifications