இதுதான் காரணம்.. அரசியல் கட்சி ஆரம்பிக்காதது ஏன்? திடீரென மனம்திறந்து ஓபனாக விளக்கிய ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதாக கூறி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென்று தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வகையில் புதிய கட்சி துவங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். ஆனால் திடீரென்று அவர் அரசியல் கட்சி துவங்குவதை கைவிட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில் தான் அரசியல் கட்சி துவங்காததற்கான முக்கிய காரணத்தை நடிகர் ரஜினிகாந்தே வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தனது ஸ்டைலான நடிப்பால் சிறுவர்கள் முதல்வர் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இவர் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் நீண்டகாலமாக விருப்பம் தெரிவித்து வந்தனர். மேலும் ஒவ்வொரு பிறந்தநாள் மற்றும் படங்கள் ரிலீசாகும்போதும் கூட நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் வகையில் ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அரசியலில் விலகிய ரஜினி
இந்நிலையில் தான் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான படலங்கள் அதிகரித்தன. தமிழ்நாட்டு அரசியலில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு வெற்றிடம் உள்ளது. நாம் போருக்கு தயாராக வேண்டும் என பரபரப்பான கருத்துகளை நடிகர் ரஜினிகாந்த் பேசினார். கடந்த 2017ல் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் புதிதாக கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதன்பிறகு ரஜினிகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதை கைவிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த பேச்சு
இதையடுத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்காமல் கைவிட்டது தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்தனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவதில் இருந்து பின்வாங்கியும் கூட தற்போதும் அவரது ரசிகர்கள் பலபேர் அவரை அரசியலுக்கு வரும்படி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ஒவ்வொரு பேச்சு உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் தனியார் மருத்துவமனையின் 25வது ஆண்டு விழாவில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்காதது ஏன்? என்பது பற்றியும், அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

பரவிய கொரோனா
நான் அரசியலுக்கு வர முடிவு செய்திருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக கொரோனா பரவியது. சிறுநீரக பாதிப்பால் யாரையும் சந்திக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் கொரோனா 2வது அலை வந்தது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டேன். இதில் இருந்து பின்னால் போகமுடியாது. இதுபற்றி நான் டாக்டர்களிடம் கூறினேன். அப்போது டாக்டர்கள், டாக்டர் என்ற முறையில் என்னிடம் சில விஷயங்களை தெரிவித்தனர். கொரோனா 2வது அலை துவங்கி விட்டது. இந்த வேளையில் மக்களை சந்திப்பது, பிரசாரம் செய்வது உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது. ஜெர்மனி, இங்கிலாந்தில் 2வது அலை வந்ததை குறிப்பிட்டு இதை தெரிவித்தனர்.

நிபந்தனைகள் விதிப்பு
மேலும் பொதுக்கூட்டத்தல் பங்கேற்க கூடாது என்றனர். மேலும் ஒருவேளை மக்களை சந்திப்பது, பிரசாரம் செய்வது என இருந்தால் 10 அடி தூர இடைவெளி விட்டு தான் செல்ல வேண்டும், அனைத்து இடங்களிலும் மாஸ்க் போட்டு தான் போக வேண்டும் என நிபந்தனைகளை விதித்தனர். ஆனால் நான் வேனில் ஏறினாலே மாஸ்க் எடுக்கும்படி தான் முதலில் கூறுவார்கள். கூட்டத்தை விட்டு 10 அடி தூரத்தில் நிற்க வேண்டும் என்பதற்கு சான்ஸே கிடையாது.

பயம் தேவையில்லை என..
இப்படியான சூழலில் நான் என்ன செய்ய முடியும்?. இதை எப்படி வெளியே நான் சொல்வது?. சொன்னாலும் கூட அரசியலுக்கு வருவதில் பயந்துவிட்டேன் என்பார்கள் என்றேன். அப்போது டாக்டர் என்னிடம் எந்த மீடியாவாக இருந்தாலும், ரசிகர்களாக இருந்தாலும் என்னை கூப்பிடுங்கள் உங்கள் உடல் நலம் குறித்து நான் வந்து கூறுகிறேன். இதனை கூறுவதில் பயம் ஒன்று தேவையில்லை. உடல் நலம் மிகவும் முக்கியம். நாம் ஒன்றும் பொய்சொல்லவில்லை என கூறினார். இதையடுத்து தான் நான் ஓபனாக அரசியலுக்கு வரவில்லை என்று கூறினேன்'' என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications