பரம எதிரியை கூட பார்க்குறாங்க.. விஜயை கண்டுக்க மாட்டுறாங்களே.. ஓபிஎஸ், அன்வர்.. கவனிச்சீங்களா?
சென்னை: அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்தவர்கள் ஓ பன்னீர்செல்வம், அன்வர் ராஜா. மிக தீவிரமாக திமுகவை தொடக்க காலத்தில் இருந்தே எதிர்த்தவர்கள்.
இதில் ஓ பன்னீர்செல்வம் அதிமுக கட்சியின் கீழ் முதல்வராகவும் இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லெப்ட் ஹேண்டாக இருந்தவர். இன்னொரு பக்கம் அன்வர் ராஜா அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே உறுப்பினர்.

ஓ பன்னீர்செல்வம் ஸ்டாலின் மீட்டிங்
இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்..
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நேற்று காலையில் முதல்வர் ஸ்டாலினை (O Panneerselvam Stalin meets) சந்தித்து பேசினார். காலையில் நடைப்பயிற்சி சென்ற போது முதல்வர் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு குறித்து நேற்று ஓ பன்னீர் செல்வம் முக்கியமான முடிவை வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்றார் ஓபிஎஸ். அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். ஸ்டாலின் ஓபிஎஸ் இடையேயான சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்த பிறகு பாஜக தரப்பு பேசினார்களா என்ற கேள்வி, "இல்லை" என்று ஒரே வார்த்தையில் மட்டும் ஓபிஎஸ் பதிலளித்தார். ஓ பன்னீர்செல்வம் முடிவால் அதிமுக கூட்டணிக்கு தென் மண்டலத்தில் வர வேண்டிய முக்குலத்தோர் வாக்குகள் கடுமையாக சரியும். அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் முக்குலத்தோர் கடுமையாக அதிர்ச்சி அடையும் வாய்ப்புகள் உள்ளன.
அன்வர் ராஜா முடிவு
இன்னொரு பக்கம் திமுகவை கடுமையாக எதிர்த்து வந்த அன்வர் ராஜா.. திமுகவில் இணைந்துள்ளார். இந்த இரண்டு பேருமே தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் செல்வதை பற்றி யோசிக்ககூடவில்லை.. இதற்கு பின் சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு பேருக்குமே தமிழக வெற்றிக் கழகத்தில் இடம் கிடைக்கும், பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும், திமுகவுடன் போனார்கள் என்ற பெயரை பெறாமல் இருக்கவும் முடியும். ஆனாலும் ஓபிஎஸ், அன்வர் ராஜா இருவரும் திமுக பக்கம் சென்றுள்ளனர்.. தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் செல்வதை பற்றி யோசிக்ககூடவில்லை. இதில் ஓ பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக திமுக பக்கம் போகவில்லை என்றாலும் ஸ்டாலினுக்கு நெருக்கமாகிவிட்டார்.
ஓபிஎஸ் ஸ்டாலின் நெருக்கம்
அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, 1986-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது திமுக ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதிமுகவுக்கு இது ஒரு சவாலாகவே இருந்தது. இருப்பினும், அன்வர் ராஜா தேர்தலில் வெற்றி பெற்றார். அன்வர் ராஜா அப்போதில் இருந்தே தீவிர திமுக எதிர்ப்பாளர்.
அன்வர் ராஜா, மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், எம்.ஜி.ஆர் அவரை உரையாற்ற அழைத்தார். மேலும், அதிமுகவின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவில் சேர்த்துக் கொண்டார். அந்தக் குழுவில் 13 பேர் அமைச்சர்களாக இருந்தனர், அன்வர் ராஜாவும், ஜெயலலிதாவும் அமைச்சர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர் அன்வர் ராஜா.
அப்போது எம்ஜிஆர் பார்த்து வளர்ந்தவர் என்பதால் அப்போதில் இருந்த அன்வர் ராஜா தீவிரமாக திமுகவை எதிர்த்தவர்.. இப்போது அதே திமுகவில் இணைந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் அவர் பாஜக கூட்டணியில் இல்லாத தமிழக வெற்றிக் கழகம் பக்கம் செல்லவில்லை.
ஏன் தமிழக வெற்றிக் கழகம் செல்லவில்லை?
1. தமிழக வெற்றிக் கழகம் திமுகவை கடுமையாக எதிர்க்க கூடிய கட்சிதான். ஓ பன்னீர்செல்வம், அன்வர் ராஜாவிற்கு ஏற்ற கொள்கை இருந்தாலும்.. அவர் அங்கே செல்லவில்லை.
2. இதற்கு காரணம் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறினாலும்.. பாஜகவை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர் மத்திய அரசை விமர்சிக்கும் அறிக்கைகளில் கூட திமுகவைத்தான் கடைசியில் விமர்சனம் செய்கிறார். பாஜகவை பெரிதாக தாக்குவது இல்லை.
3. பாஜகவை பல இடங்களில் நேரடியாக விஜய் அட்டாக் செய்வது இல்லை.
4. அதோடு தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்கிறார்கள். ஒரு பிரம்மாண்ட கட்சி அதிமுகவிற்கு வருவதாக எடப்பாடி கூறி இருப்பது இதே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓ பன்னீர்செல்வம், அன்வர் ராஜா தமிழக வெற்றிக் கழகத்திற்கு போய்.. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது தர்மசங்கடமாக இருக்கும்.
5. அதோடு தமிழக வெற்றிக்கழகம் சிறிய கட்சி. இன்னும் நிரூபிக்காத கட்சி. அப்படிப்பட்ட கட்சியில் எதிர்காலமும் இல்லை.
6. திமுகவில் அதிமுகவில் இருந்து வந்த சேகர் பாபு தொடங்கி செந்தில் பாலாஜி வரை பலர் பெரிய அளவில் மரியாதை பெறுகின்றனர். முக்கிய பொறுப்புகளையும் பெறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இது பெரிய அளவில் நல்வாய்ப்பாகவும் இருக்கும்.. என்பதால் இவர்கள் திமுக பக்கம் சாய காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications