வீடியோ டிரெண்டிங்கில் இருக்கும் போதே.. டெலிட் செய்த பரிதாபங்கள்.. பிரஷர் தந்த "அந்த" நபர் யார்?
சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருந்த பரிதாபங்கள் குழு.. அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த குழுவிற்கு "சிலர்" அழுத்தம் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருப்பதி லட்டு விவகாரம் பெரிய சர்ச்சையாகி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் பரிதாபங்கள் யூ டியூப் சேனல் நிர்வாகிகள் கோபி - சுதாகர் காமெடி வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டு இருந்தனர். நேற்று இந்த வீடியோ பெரிய அளவில் டிரெண்டானது. இந்த வீடியோ டிரெண்டான் போதே.. அதை பரிதாபங்கள் குழுவினர் நீக்கினர். சிலர் இந்த வீடியோ குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில்.. விமர்சனங்களை வைத்த நிலையில், பரிதாபங்கள் குழுவினர் அந்த வீடியோவை நீக்கினர்.

இதையடுத்து அந்த வீடியோவை நீக்கிய பரிதாபங்கள் குழுவினர், கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால்.. அதற்க்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம்.. இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.. என்று கூறி உள்ளனர். அதோடு வீடியோவையும் நீக்கி உள்ளனர்.
அழுத்தம்: இது தொடர்பாக அந்த குழுவிற்கு "சிலர்" அழுத்தம் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யா இது தொடர்பாக செய்திருந்த போஸ்டில், பரிதாபங்கள் குழுவினர் அந்த வீடியோவை நீக்கி உள்ளது. நல்ல புத்தி இப்போதாவது வந்ததே. வேறு எந்த சமூகத்தையும் அல்லது மதத்தையும் கேலி செய்யும் வகையில் இதுபோன்ற வீடியோவை எடுக்க அவர்கள் துணிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்து மதத்தை பற்றி மட்டும் அவர்கள் இப்படி செய்துள்ளனர் என்பது மிகவும் வெளிப்படையானது. இந்த வீடியோவையோ டெலிட் செய்வதை.. சாத்தியமாக்கிய.. ஆனால் பெயரை வெளியிட விரும்பாத "அந்த" சில நல்லவர்களுக்கு எனது பாராட்டுக்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதாவது பரிதாபங்கள் குழுவினர் வீடியோவை டெலிட் செய்ய ஒரு சிலர்.. பெயர் வெளியிட விரும்பாத ஒரு சிலர் காரணம் என்று அவர் கூறி உள்ளார்.
மட்டக்கொழுப்பு : திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த புகார் தற்போது உண்மையாகி உள்ளது. லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.
ரிசல்ட் சொல்வது என்ன?: இதற்காக அப்போது தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது 5 சாம்பிள் மதிப்புகள் முறையே, 86.62 , 106.89, 22.43, 117.42, 19.72 ஆகும்.
இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால்.. அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.

இதில் சாம்பிள் ஒன்றில் சோயா பின் அவரை, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம்.
சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு
சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி
சாம்பிள் நான்கில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். எதிலும் உறுதியாக முடிவு சொல்லப்படவில்லை. மீன் எண்ணெய் அல்லது மாட்டுக் கொழுப்புதான் என்று சொல்ல முடியாது. முக்கியமாக standard s value- வரம்பு வைத்து ஒரு முடிவிற்கு வர முடியாது.
பசு மாட்டை தவிர வேறு மாட்டின் நெய்யை பயன்படுத்தினால், மாட்டிற்கு அதீத தீவனம் கொடுத்தால் அல்லது மாட்டிற்கு மிக குறைவாக தீவனம் கொடுத்தால் கூட அதன் நெய்யில் இருக்கும் கொழுப்பு இந்த மாதிரி தவறான எஸ் மதிப்புகளை காட்ட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications