உதயநிதி கிளம்பிய அடுத்த நொடி.. திகுதிகுவென ஓடி வந்த மக்கள்.. கடைசியில் பார்த்தா இதுக்குதானா.. ப்பா!
உதயநிதி வருகைக்காக தோரணங்கள் கட்டப்பட்டு, பலூன்கள் வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய கவனம் பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. முக்கிய தலைவர்களின் நேரடி பிரச்சாரங்கள் தொடங்கி விட்டதால் தேர்தல் களம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் காணப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு
திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இங்கே அதிமுக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இதையடுத்தே 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜின் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.

திமுக பிரச்சாரம்
அதிமுகவிற்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் திமுகவும் இங்கே தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. 60 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை எடுக்க வேண்டும் என்றால் இன்னும் உழைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தரப்பு வேகம் காட்ட தொடங்கி உள்ளனராம். ஈரோடு கிழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இங்கே பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரம்
பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையே உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் மாலை பிரச்சாரம் செய்வார். இந்த பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 21 மாத திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்களை செய்து இருக்கிறோம். இரண்டாவது அலை கொரோனா ஏற்பட்ட போது 2.14 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வழங்கினோம். ஆவின் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தோம். அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் பெண்கள் 222 பயணங்களை இலவசமாக. ஈரோட்டில் மட்டும் 11 கோடி பேர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 எப்போது வழங்கப்படும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. விரைவில் அதை கொடுப்போம். ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின் 5-6 மாதங்களில் கண்டிப்பாக கொடுப்போம். நான் உறுதி அளிக்கிறேன், என்று கூறினார்.

பிரச்சாரத்திற்கு பின் என்ன நடந்தது?
நேற்று இந்த பிரச்சாரத்திற்கு முன் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக பெரிய அளவில் தோரணங்கள் கட்டப்பட்டு, பலூன்கள் வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் முடித்து சென்றதும் திகுதிகு வென்று மக்கள் கூட்டம் அங்கே ஒரு இடத்தில் கூடியது. என்ன மக்கள் கூட்டம் ஒரு இடத்தில் மட்டும் இப்படி இருக்கிறதே என்று செய்தியாளர்கள் பலரும் அங்கே சென்று விசாரித்தனர். விசாரித்த போதுதான் அங்கே இருந்த பலூன்களை எடுத்து செல்வதற்காக இவர்கள் இப்படி அங்கே கூடியது தெரிய வந்தது. முக்கியமான வயதான பலர் இப்படி பலூனை எடுக்க கூடியது வியப்பை ஏற்படுத்தியது. ஒரு பலூனுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா என்று சொல்லும் அளவிற்கு மக்கள் கூடியது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications