உலை வச்சிடுவீங்க போல! Get Out போர்டில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்தது ஏன்? இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், இன்று தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் இருந்த தீர்மான போர்டில் கையெழுத்திட மறுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இப்படி கையெழுத்து போட மறுத்ததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்று தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பேசிய, நான் இங்கு தேர்தல் வியூக வகுப்பாளராக வரவில்லை. தவெக தலைவர் விஜய்யின் நண்பராக வந்துள்ளேன். தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார் அதற்காக வந்துள்ளேன். பிரசாந்த் கிஷோருக்கும் வெற்றிக்கும் எந்த தொடர்பும் இல்லை, உங்கள் உழைப்பே வெற்றி தரும்.

TVK Tamilaga Vettri Kazhagam Vijay

பிரசாந்த் கிஷோருக்கும் வெற்றிக்கும் எந்த தொடர்பும் இல்லை, உங்கள் உழைப்பே வெற்றி தரும். தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார்; தமிழ்நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.

தவெக ஒரு கட்சி அல்ல; அதுவொரு புதிய அரசியல் இயக்கம். விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை.புதிய தலைமையை பார்க்க விரும்பும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக தவெக உள்ளது. தவெக வெற்றி பெற்றால் அது எனக்கான வெற்றி அல்ல என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

கையெழுத்திட மறுப்பு

இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து பேசிய போதிலும்.. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், இன்று தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் இருந்த தீர்மான போர்டில் கையெழுத்திட மறுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் இப்படி கையெழுத்து போட மறுத்ததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட திணிப்பு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம் என்ற தலைப்பின் கீழ் இந்த போர்டு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த போர்டில், இந்தி திணிப்பை ஆதரிக்கும் புதிய கல்விக்கொள்கை, வாக்கு வங்கி சாதி அரசியல் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் வரிகள் இருந்தன. இதன் காரணமாகவே பிரசாந்த் கிஷோர் இந்த போர்டில் கையெழுத்து போட மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் இந்தி திணிப்பை பிரசாந்த் கிஷோர் எதிர்க்க முடியாது. அப்படி செய்தால் பீகாரில் கட்சி வைத்திருக்கும் பிகேவிற்கு அது பெரிய சங்கடமாக மாறும். அதிலும் சாதி அரசியல் உச்சத்தில் இருக்கும் பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஜாதியை நம்பியே உள்ளது. அதை எதிர்த்தால் பிகே தலைப்பு செய்தியாக மாறுவார். அவரின் அரசியலுக்கே உலை வைப்பது போல இது மாறிவிடும். இதன் காரணமாகவே பிரசாந்த் கிஷோர் இந்த போர்டில் கையெழுத்து போட மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

TVK Tamilaga Vettri Kazhagam Vijay

நெருக்கமான விஜய் - பிகே:

இந்த நிகழ்வில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. விஜயின் லெப்ட் ஹேண்ட் போல இந்த நிகழ்வில் பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். பொதுவாக விழா மேடையில் விஜய்தான் தனியாக மேடை ஏறுவார். அதன்பின் அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேடை ஏறுவார். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

இன்று பிரசாந்த் கிஷோர்தான் விஜய் உடன் மேடை ஏறினார். இருவருக்கும் நிகராக மேடையில் மரியாதை அளிக்கப்பட்டது. பிரசாந்த் கிஷோர் கிட்டத்தட்ட விஜயின் லெப்ட் ஹேண்ட் போல கூடவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+