50:50 டீல்! அப்செட்டில் இருந்த சசிகலா வீட்டில்.. "விஜயசாந்தி" ஏற்றிய விளக்கு! அமித் ஷா கேம் ஸ்டார்ட்
சென்னை: பாஜக நிர்வாகி விஜயசாந்தியை சசிகலா சமீபத்தில் ரகசியமாக சந்தித்து இருக்கிறாராம். இந்த சந்திப்பு காரணமாக தமிழ்நாடு அரசியலில் பல எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.. அப்படி இந்த சந்திப்பில் என்னதான் பேசப்பட்டது? வாருங்கள் பார்க்கலாம்!
தஞ்சாவூர் மாணவி மரணத்தின் உண்மை பின்னணிகளை அறிந்து கொள்ள பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், நடிகை விஜயசாந்தியும் இடம் பெற்றிருந்தார். அந்த விசாரணைக் குழு தஞ்சை சென்று விசாரித்தது. அப்போது சென்னை வந்த விஜயசாந்தி சசிகலாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து இருக்கிறார்களாம். அதோடு பல முக்கியமான விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம்.

சசிகலா
சசிகலாவுக்கும் நடிகை விஜயசாந்திக்கும் நல்ல நட்பு உண்டு. சசிகலாவை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த போதே விஜயசாந்தி நீண்ட நேரம் பேசினார். இது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். அந்த சந்திப்பின் போது, தனது தலைமையில் அதிமுகவை கொண்டுவர பாஜக உதவ வேண்டும். அதற்காக அமித் ஷாவை சந்திக்க வேண்டும். அதற்கு அவரது அப்பாயிண்மெண்டை ஃபிக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என விஜயசாந்தியிடம் கேட்டுக்கொண்டார் சசிகலா.

விஜயசாந்தி
அப்போது அதிமுகவை மீட்பதில் சசிகலா மிக தீவிரமாக இருந்தார். இது, சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் இல்லை என்ற நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு நடந்த சந்திப்பு. சசிகலா கோரிக்கையை ஏற்று விஜயசாந்தியும் அமித் ஷா - சசிகலா மீட்டிங்கிற்காக தீவிரமாக முயற்சித்தார். ஆனால், சசிகலாவை சந்திக்க அமித் ஷா மறுத்து விட்டார்.

சசி விஜயசாந்தி மீட்டிங்
இதனை சசியிடம் விஜயசாந்தி தெரிவித்த போது சசிகலாவுக்கு செம அப்-செட் ! அதன் பிறகு அமித் ஷாவை சந்திக்க நினைக்கும் திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டார் சசிகலா. இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு சசிகலாவை ரகசியமாக சந்தித்திருக்கிறார் விஜயசாந்தி. அந்த சந்திப்பில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள்.

பாஜக பிளான்
பாஜக இப்படி நினைப்பதற்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கிறதாம். அதன்படி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவை ஒருமுகப்படுத்த பாஜக நினைக்கிறதாம். அதாவது தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சமூகமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு கடந்த தேர்தலில் கிடைக்கவில்லை. அதிமுகவில் ஓபிஎஸ்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் முழுமையாக அதிமுக பக்கம் செல்லவில்லை. கடந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வி அடைய இது முக்கிய காரணமாக இருந்தது.

முக்குலத்தோர் வாக்கு
ஓபிஎஸ் இருந்தாலும் கூட முக்குலத்தோரின் தேர்வு இப்போது திமுகவாகவே உள்ளது. சசிகலாவை அதிமுகவில் இணைப்பதால் மட்டுமே அந்த சமூகத்தின் வாக்குகள் அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கும் என்று பாஜக நம்புகிறதாம். அதிமுக கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் பாஜகவும் இந்த வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்று அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் நம்புகிறார்களாம். அதிமுக வலிமையானால் தான் திமுகவுக்கு செக் வைக்க முடியும். வலிமையாவதற்கு சசிகலா அதிமுகவில் இருக்க வேண்டும் பாஜக கருதுகிறதாம்.

50:50 டீலிங்
வலிமையான அதிமுகவுடன் பாஜக 50:50 சீட் சேரிங் செய்து கூட்டணி அமைத்தால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பாஜகவுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் பாஜக புதிய பலம் பெறும். ஆனால் 50:50 சீட் சேரிங்கை எடப்பாடி ஒப்புக்கொள்வாரா? என்று சந்தேகம் பாஜகவிற்கு இருக்கிறதாம். ஏனென்றால் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணி இடைதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து அவர் கெடுபிடி காட்டினார். அன்றைக்கு ஆளூம் கட்சியாக இருந்ததால் அப்படி நடந்து கொண்டார்.

விஜயசாந்தி சொன்னது என்ன?
இப்போது அப்படி நடந்துக்க மாட்டார். இருந்தாலும், அவரை வழிக்கு கொண்டுவருவது எப்படி என்று டெல்லி ஆலோசனை செய்து வருகிறதாம். இந்த தகவல்களைக் கேள்விப்பட்ட விஜயசாந்தி, அதனை சசிகலாவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம். நீங்கள் 50-50 டீலிங்கிற்கு ஒப்புக்கொண்டால் டெல்லி பாஜக உங்களுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புகள் உள்ளது.. மீட்டிங்கிற்கு வேண்டுமானால் வாய்ப்புகள் உள்ளன.. என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறாராம் விஜயசாந்தி. இதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது என்கிறார்களால் சசிகலா தரப்பினர். அப்செட்டில் இருந்த சசிகலா வீட்டில் விஜயசாந்தி புதிய விளக்கை ஏற்றி இருக்கிறார்.. இது ஜோராக எரியுமா? இல்லை பழைய மாதிரி பியூஸ் போகுமா என்பது போக போகத்தான் தெரியும்!












Click it and Unblock the Notifications