மார்ச் 2018 டூ மார்ச் 2019.. தேர்தல் பத்திர தரவுகளை வெளியிடாத எஸ்பிஐ! என்ன காரணம்? யார் நிதி தந்தது?
சென்னை; தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சி எவ்வளவு பெற்றது என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பாஜகவிற்கே இதுவரை சென்றுள்ளது
கடந்த 2018ம் தேதி பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில், நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.
எவ்வளவு சென்றது; எந்த கட்சி எவ்வளவு பெற்றது என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பாஜகவிற்கே இதுவரை சென்றுள்ளது
அதிகபட்சமாக 11562.5 கோடி ரூபாய் நிதியில் 6566 ரூபாயை பாஜக நிதியாக பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது
மொத்த தேர்தல் பத்திரங்களில் 46.74 சதவிகிதம் பாஜகவிற்கு சென்றுள்ளது
1093 கோடி ரூபாய் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நிதியாக சென்றுள்ளது
காங்கிரஸ் கட்சிக்கு 1123 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது
திமுக கட்சிக்கு 617 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது
அதிமுக கட்சிக்கு 6 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது
குழப்பம்: நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திர விவரங்களில், குறிப்பிட்ட சில வருடங்கள் இடம்பெறாதது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பிஐ ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2024 வரை மட்டுமே தேர்தல் பத்திரங்களின் தரவைப் பகிர்ந்துள்ளது. மார்ச் 2018 - மார்ச் 2019 வரையிலான தரவு இல்லை. மார்ச் 2018 முதல் மார்ச் 2019 வரை 2,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.
எதிர்ப்பும் வழக்கு பின்னணியும்: கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த தேர்தல் பத்திர தீர்ப்பு என்பது மொனோபாலி தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சிகளை தாஜா செய்து வந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விழுந்த ஒரு அடியாகும். இதுவரை அவர்கள் கொடுத்த.. கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்களின் தரவுகள் வெளிவந்தால் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற மொத்த விவரமும் அம்பலப்படுத்தப்படும்.
எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருந்தது.. அதனால் எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடும். அரசியல் வர்க்கமும் தொழில்துறையும் இந்த தீர்ப்பால் தடம் புரண்டு உள்ளன என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் இன்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது.
விஷயம் வெளியே வராது: அதே சமயம் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் முக்கியமான சலுகை ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
அதன்படி தேர்தல் பாத்திரங்களை பயன்படுத்தி நிதி கொடுத்த நிறுவனங்கள் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் கொடுத்த பணத்தை வெளியிட வேண்டும். அதேபோல் எந்த கட்சி எல்லாம் பணம் பெற்றனர் என்றும் வெளியிட வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று சலுகை கொடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications