ஸ்டாலினை சந்தித்த செங்கோட்டையன்.. எக்ஸ் உளவுத்துறை அதிகாரி உதவியை கேட்ட எடப்பாடி? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த வாரம் சந்தித்தார் அதிமுக சீனியர் செங்கோட்டையன். அந்த சந்திப்பில் இருவரும் பரஸ்பரம் என்ன விவாதித்துக் கொண்டனர்? எதற்காக சந்தித்தார்? என்பது பற்றி அறிந்து கொள்ள ஏகத்துக்கும் மெனக்கெட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஓய்வுப்பெற்ற முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியின் உதவியையும் கேட்டுள்ளார் எடப்பாடி. இதற்கிடையே, தனக்கு நெருக்கமானவர்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அந்த ஆலோசனையில், "திமுகவுக்கு வந்திடுங்களேன். உங்களுக்கான அங்கீகாரத்தை திமுக உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் வந்தால் எனக்கு ரொம்ப சந்தோசம்னு என்னிடம் சொன்னார் முதல்வர்.

Edappadi Palaniswami Sengottaiyan

ஆனால், இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. காலம் எப்படி நகர்கிறதின்னு பார்ப்போம்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். திமுகவுக்கு போனால் அமைச்சர் பதவி கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். ஆனால், சசிகலாவும் தினகரனும் 'தேர்தலுக்குள் அதிமுக நம் கைக்கு வந்துடும். நீங்கதான் பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர். அதனால் எந்த அரசியல் முடிவையும் எடுக்காதீர்கள்னு சொல்றாங்க. நானும், அது தான் சரின்னு நினைக்கிறேன்" என்று செங்கோட்டையன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

கட்சி மாறுகிறாரா செங்கோட்டையன்

அதனைக்கேட்ட அவரது ஆதரவாளர்கள், "நீங்க நினைப்பது சரிதான் அண்ணே. அதிமுகவில் இருந்து கொண்டு கட்சித் தலைமைக்கு நீங்கள் வரவேண்டும். அதுதான் சரி. கோர்ட்டில் எடப்பாடி தலைமைக்கு எதிராகப் போடப்பட்ட சிவில் வழக்கின் போக்கினை அறிந்து, அது நமக்கு எதிராக இருந்தால் மாற்றி யோசிக்கலாம் அண்ணே"என்று சொல்லியிருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் தயாரித்ததாகவும், ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் வைத்து விட்டார் என்றும் ஒரு தகவல் செங்கோட்டையன் தரப்பில் பரவியுள்ளது.

எடப்பாடி செங்கோட்டையன் மோதல்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.

உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது?:

உண்மையான காரணம் அது கிடையாது என்கின்றனர் அதிமுகவினர். நம்மிடம் பேசிய சீனியர் ஒருவர், "2026-ல் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் செங்கோட்டையன். கடந்த 1 வருடமாக சசிகலாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். சசிகலாவின் எண்ணத்தை பிரதிபலிப்பதைப் போலவே செங்கோட்டையனின் சமீபகால நடவடிக்கைகள் இருக்கின்றன.

செங்கோட்டையன் கொங்கு மண்டலம். அதே எடப்பாடியின் அதே ஜாதி பின்புலத்தை சேர்ந்தவர். செங்கோட்டையனுக்கு எடப்பாடியை விட அவர் ஜாதி பின்புலத்தில் அதிக பவர் உள்ளது. செங்கோட்டையன் சீனியர் என்பதால்.. அவருக்கு உட்கட்சி சப்போர்ட் அதிகம் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+