புதிய வேலை மசோதா நிறைவேற்றம்.. இனி தமிழ்நாடு தனியார் ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த ,சட்டப்படி, காலை 7 மணிக்கு அலுவலகம் சென்றால் மாலை 7 மணிக்கு திரும்பும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

Why did Tamil Nadu government allow 12 hours of work in Private Companies? What it is about?

ஐடி நிறுவனங்கள் சில வைத்த கோரிக்கை காரணமாவும், உற்பத்தியை பெருக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் இந்த முறையை கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதை தற்போது திமுக கூட்டணி கட்சிகளே சட்டசபையில் எதிர்த்து உள்ளன. தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை சட்டசபையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

கடும் எதிர்ப்பிற்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டத்தில் என்ன உள்ளது?

இந்த சட்டப்படி ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வேலை நிறுத்தத்தை 12 மணி நேரம் வரை நீட்டிக்க முடியும்.

இதற்கு முன் 8 மணி நேரத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பது நீக்கப்பட்டு உள்ளது.

ஆனால் 12 மணி நேரம் என்பது கட்டாயம் கிடையாது. அதனால் 8 மணி நேரம் கட்டாயம் என்று இருப்பது போல 12 மணி நேரம் கட்டாயம் கிடையாது.

12 மணி நேரம் வேண்டாம் என்றால் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களிடம் மறுக்க முடியும்.

Why did Tamil Nadu government allow 12 hours of work in Private Companies? What it is about?

முதலீட்டை அதிகரிக்க திட்டமா ?

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

. இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் முதலீடு அதிகரித்தாலும் ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைவாக உள்ளது. ஐடி துறையில் பெங்களூர் அளவிற்கு நாம் இன்னும் முன்னேறவில்லை .

ஐடி நிறுவனங்களை இங்கே கொண்டு வர கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நாம் வெளியிட வேண்டும். வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் ஐடி நிறுவனங்கள் அதிக அளவிற்கு தமிழ்நாடு நோக்கி வரும் என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+