சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவ்வளவு நாளா மாத்தாம? இப்போ ஏன்? டாப் அதிகாரி திடீர் "டிரான்ஸ்பர்".. முதல்வர் ஆர்டர்! இதான் நடந்தது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் மாற்றப்பட்டது ஏன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    37 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. Tamilnadu Government நடவடிக்கை *Politics

    தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் விரைவில் நடைபெற உள்ளதாக முன்பே ஒன்இந்தியா சார்பாக செய்திகளில் குறிப்பிட்டு இருந்தோம். அதன்படியே சமீபத்தில் தமிழ்நாட்டில் எதிர்பார்க்கப்பட்டபடியே ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

    கடந்த வாரம் தமிழ்நாட்டில் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டனர்.

    வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி; தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ- 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி; தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ- 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

    ஐபிஎஸ்

    ஐபிஎஸ்

    ஐபிஎஸ் ரவி ஓய்வு பெற்ற காரணத்தால் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு தாம்பரம் ஆணையாரக கூடுதல் பொறுப்பு வழங்கி காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டு இருந்தார். தற்போது முறைப்படி தாம்பரம் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் வருண்குமார் மதுரை அமலாக்கப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    ஐஏஎஸ்

    ஐஏஎஸ்

    அப்போதே தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம். புதிய அதிகாரிகள் நியமனம் நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதன்படியே தற்போது தமிழ்நாட்டில் 35 க்கும் மேற்ப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலளாராக பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அதிகாரிகள் மாற்றம்

    அதிகாரிகள் மாற்றம்

    தமிழகத்தின் புதிய மருத்துவ செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிகா ; போக்குவரத்து துறை ஆணையராக நிர்மல் குமார்; ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஷ் அகமது உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை பொறுப்பில் இருந்த எஸ்.கே. பிரபாகர் மாற்றப்பட்டு உள்ளார். அவர் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பணீந்திர ரெட்டி

    பணீந்திர ரெட்டி

    உள்துறை செயலளாராக பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளர் இப்படி திடீரென மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில் அரசியல் வட்டாரத்தில் இதை பற்றி விசாரித்தோம். தமிழ்நாட்டில், முக்கியமாக சென்னையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக உள்துறை செயலாளர் மாற்றப்பட்டு இருக்கிறாரா என்று விசாரித்தோம். ஆனால் அதற்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்று அவ்வட்டாரங்க தெரிவித்தன.

    அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்

    அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்

    அவர் 2019 நவம்பரில் உள்துறை செயலாளராக பொறுப்பேற்றார். இந்த நிலையில்தான் நீண்ட காலமாக அவர் பதவியில் இருப்பதால் மாற்றப்பட்டு இருக்கிறார். முதல்வரின் இந்த மூவிற்கு பின் வேறு காரணம் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள். மற்றபடி அவரின் மாற்றத்திற்கு அதிருப்தி எல்லாம் காரணம் இல்லை. ஆனால் வெகு விரைவில் வேறு ஒரு அதிகாரி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமான "தலை" ஒருவர். சுயமாக முன் வந்து துறையை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    English summary
    Why did the additional chief secretary to home Prabhakar IAS suddenly transfer? தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X