"கழட்டுங்க.. மோடி போட்டோவை தூக்குங்க".. தோளை தொட்டு தள்ளிவிட்ட அதிகாரி.. முறைத்து பார்த்த பெண்
பெண் ஊழியர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுவற்றில் மாட்டினார்
சென்னை: அரசு அலுவலகத்தில் பிரதமர் மோடியின் போட்டோவை, பெண் ஊழியர் ஒருவர் சுவற்றில் மாட்ட போய், அதுதான் தற்போது பிரச்சனையாகிவிட்டது. பாஜகவின் காயத்ரிக்கு டென்ஷன் எகிறி, ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு 1978ம் ஆண்டு அரசாணை உள்ளது..
இந்த அரசாணையை அரசு அலுவலகங்களில் செயல்படுத்த வேண்டும் என்று சமீப காலமாகவே பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.. சில மாவட்டங்களில் இது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன..

பாஜகவினர்
இதன் காரணமாக சில இடங்களில் அரசு அலுவலகங்களில் பாஜகவினர் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி போட்டோவை அங்கிருக்கும் சுவற்றில் மாட்டும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.. 2 மாதத்துக்கு முன்புகூட கோவையில் ஒரு சம்பவம் நடந்தது. பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினர் திடீரென உள்ளே புகுந்தனர்.. அங்கே சுவற்றில் பிரதமர் மோடியின் படத்தையும் மாட்டினர்...

மோடி போட்டோ
இப்படி அனுமதியின்றி ஆபீசுக்குள் நுழைந்து போட்டோ மாட்டுவது தவறு, வேண்டுமானால் அனுமதி பெற்றுக்கொண்டு வந்து படத்தை மாட்டிக்கொள்ளுங்கள், என்று அங்கிருக்கும் ஊழியர்கள் சொல்லியும், பாஜகவினர் கேட்கவில்லை.. "இங்கே முதல்வர் ஸ்டாலின் படம் இருக்கு.. கருணாநிதி படம் இருக்கு.. அப்படின்னா பிரதமர் மோடியின் படமும் வைக்க வேண்டும்.. நாங்க மாட்டி வைத்துள்ள இந்த பிரதமர் மோடியின் போட்டோவை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர்.

கருணாநிதி போட்டோ
அதுமட்டுமல்ல, ஒரு ஸ்டூல் எடுத்து, அதன்மீது ஏறி நின்று சுவற்றில் ஆணி அடித்து, அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சுவரில் மோடி போட்டோவை மாட்டினார்கள்.. இது தொடர்பான வீடியோவும் அப்போது வெளியாகி இருந்தது. அதுபோலவே இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், சுவரில் பிரதமர் மோடியின் போட்டோ மாட்டிவைக்கப்பட்டிருந்தது... இதைப் பார்த்த ஒருவர், டென்ஷன் ஆகி, பெண் ஊழியரிடம், பிரதமர் மோடியின் படத்தை சுவரிலிருந்து கழற்ற சொல்கிறார்..

கழட்டுங்க போட்டோவை
ஆனால், அந்த பெண் அமைதியாக நிற்கிறார்.. அதிகாரியோ அந்த பெண் ஊழியரை தள்ளிவிட்டு, அவரை திட்டுகிறார்.. போட்டோவை கழட்டுங்க, கழட்டுங்க என்று சத்தம் போடுகிறார்.. ஆனால் அந்த பெண், அதிகாரியின் பேச்சுக்கு பதிலும் சொல்லவில்லை, ரியாக்ட்டும் செய்யவில்லை.. பிறகு மெதுவாக சென்று மோடியின் போட்டோவை கழட்டி எடுத்து கொண்டு வேறு ஒரு அறைக்குள் எடுத்து செல்கிறார். இந்த வீடியோவை பார்த்துதான் பாஜகவின் காயத்ரி ரகுராம் கடுப்பாகி விட்டார்.. இந்த வீடியோவை ட்வீட்டில் ஷேர் செய்ததுடன், "என்ன ஆச்சு? இதை நான் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

வேப்பத்தூர்
இந்த சம்பவம் நடந்தது தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில்தானாம்.. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படத்தை அகற்றியவர் பேரூராட்சி தலைவர் அஞ்சம்மாள்.. என்பவர்தான். 7வது வார்டு உறுப்பினரான பாஜகவை சேர்ந்த சந்திரசேகரன், இங்குள்ள சுவற்றில் பிரதமர் படத்தை மாட்டி உள்ளார்.. அந்த போட்டாவைதான் அஞ்சம்மாள் அகற்றி, செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பரபரப்பானதையடுத்து, இதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
பாஜக இல்லாத சட்டமன்றம்.. 5வது சக்தியாக பரகல பிரபாகர் முன்னெடுக்கும் புதிய அரசியல் அலை.. பின்னணி என்ன -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
இப்படி பண்ணா போதும்.. வங்கி கணக்கில் பணம் தேடி வரும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ் -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது












Click it and Unblock the Notifications