Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணசைத்த ஸ்டாலின்! தூக்கி அடிக்கப்பட்ட முக்கிய நிர்வாகி.. களமிறக்கப்பட்ட "ஐஏஎஸ்".. அதிரடி மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேர்மன் பதவி நேற்று மாலை திடீரென மாற்றப்பட்டது. ஆளும் திமுக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்புகளை பெற்றுள்ளது.

தமிழ்நாடு கேபிள் சேர்மன் பதவியில் குறிஞ்சி சிவக்குமார் பதவி வகித்து வந்தார். இந்த பதவியில் தற்போது ஐஏஎஸ் அதிகாரி நீரஜ்மிட்டல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு முழுக்க தனியார் கேபிள் நிறுவனங்கள் 2007 வரை உச்சத்தில் இருந்தன. உள்ளூர் அளவிலும், மாவட்ட அளவிலும் தனியார் கேபிள் நிறுவனங்கள்தான் கோலோச்சி இருந்தன.

கட்டணம்

கட்டணம்

இதில் கட்டண முறை மாவட்டங்கள் மாவட்டங்களுக்கு மாறி இருந்தன. சில தனியார் கேபிள் நிறுவனங்கள் அதிக அளவு கட்டணங்கள் வசூலித்து வந்தன. இதையடுத்து தமிழ்நாடு மக்கள் பலரும், அரசு சார்பாக குறைந்த விலையில் கேபிள் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் தமிழ்நாடு கேபிள் நிறுவனம் 2007ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.

கேபிள்

கேபிள்

இதன் மூலம் அரசு கேபிள் குறைந்து கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பதவியில் பொதுவாக கட்சி நிர்வாகிகளே நியமனம் செய்யப்பட்டு வந்தனர். கட்சியில் பதவி அளிக்கப்படாத நிர்வாகிகள் அல்லது மூத்த நிர்வாகிகள் சிலருக்குத்தான் இந்த பதவி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இது மக்களோடு நேரடி தொடர்பு உள்ள துறை ஆகும். முக்கியமாக சேவை தொடர்பான புகார்களில் உடனுக்குடன் தீர்வுகளை காண வேண்டும்.

கணிசமான வருவாய்

கணிசமான வருவாய்

அதேபோல் அரசுக்கு மாதம் கணிசமான வருவாய் ஏற்படுத்த கூடிய துறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறை கட்சி நிர்வாகிகளிடம் இருப்பதை விட துறை ரீதியான அனுபவம் கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் இருப்பதே சரியாக இருக்கும். இந்த பதவிக்கு கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி குறிஞ்சி சிவகுமார் நியமிக்கப்பட்டார். இவர் முன்னாள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் ஆவார்.

கேபிள் நிர்வாகம்

கேபிள் நிர்வாகம்

அதேபோல் கேபிள் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு பணிகளை இவர் செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு அரசின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ் தகவல் தொழில்நுட்ப துறையில் அனுபவம் கொண்டவர் என்பதால் அவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் பதவியுடன் கூடுதல் பொறுப்பாக அவர் இந்த பதவியை கவனிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய பொறுப்புகள்

முக்கிய பொறுப்புகள்

அரசு துறைகளில் இருக்கும் முக்கிய பொறுப்புகளை அரசியல் நிர்வாகிகளிடம் இருந்து வாங்கி, அதிகாரிகளிடம் கொடுக்கும் வழக்கத்தை தமிழ்நாடு அரசு கையில் எடுத்து உள்ளது. முன்னதாக சேர்மன் பதவியில் இருந்த குறிஞ்சி சிவக்குமாரின் மீது சிலர் புகார்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிர்வாக ரீதியாக சில புகார்களும், அமைச்சர் ஒருவருக்கு எதிராக அரசியல் ரீதியாக செயல்பட்டார் என்றும் புகார்கள் வைக்கப்பட்டன. இதையடுத்தே இந்த மாற்றம் நடைபெற்று உள்ளது.

மாநகராட்சி நிதி

மாநகராட்சி நிதி

ஏற்கனவே, மாநகராட்சிகளின் நிதி தொடர்பான விவகாரங்களை கையாளும் அதிகாரம் அரசியல்வாதிகளிடம் இருந்ததை சமீபத்தில் அவர்களிடமிருந்து பறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது. அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை இது போன்ற துறைகளில் நியமிப்பதுதான் சரியான நடவடிக்கை என்று இந்த நடவடிக்கை பாராட்டுகளை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+