சென்னை கோயில் குண்டு வீச்சு! பக்தியா கும்பிட்டும்! இந்த சாமி எதுவும் செய்யலை! இளைஞர் வாக்குமூலம்
சென்னை: 4 ஆண்டுகளாக வணங்கியும் இந்த கோயிலில் உள்ள கடவுள் தனக்கு எதுவும் தரவில்லை என்பதால்தான் சென்னை வீரபத்திரசுவாமி கோயிலில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட போதை ஆசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் 38 வயதான முரளி கிருஷ்ணன். இவர் மது போதையில் கோயிலுக்கு வந்துள்ளார்.

அப்போது பெட்ரோல் குண்டை மறைத்து வைத்த படியே பூசாரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தன்னிடம் இருந்த பெட்ரோல் குண்டை முரளி காட்டியவுடன் பூசாரி அலறி அடித்து ஓடிவிட்டார். இதையடுத்து சில நிமிடங்களில் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அப்போது கோயிலுக்கு வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டை வீசிவிட்டு குடிபோதையில் முரளி கிருஷ்ணன் உளறியுள்ளார். விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கடவுளை வழிபட்டு வருகிறேன். ஆனால் கடவுள் எனது வேண்டுதலை நிறைவேற்றவில்லை.
நான் கேட்டதை திருப்பியும் தரவில்லை. அதனால்தான் நான் குண்டு வீசினேன் என முரளி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொத்தவால்சாவடி போலீஸார் முரளி கிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசினார். இவர் நீட் தேர்வுக்கு எதிராக பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்திருந்தார். அண்மைக்காலமாக பெட்ரோல் குண்டு வீசு்சு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications