முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வீட்டிற்கே போன வைரமுத்து.. நெகிழ்ந்து போய் வெளியிட்ட பதிவு
சென்னை: 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து நூறு கவிஞர்களின் கவிதைகளை திரட்டி உள்ள கவிஞர் வைரமுத்து, அந்த நூலை வெளியிட உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். முதல் நூலை வீரமணி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற உள்ளார் எனறு வைரமுத்து கூறினார்.
இது தொடர்பாக சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள டவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

"மாண்புமிகு முதலமைச்சருக்கு
அழைப்பிதழ் தந்தேன்
கலைஞர்
நூற்றாண்டு நிறைவுக்காகக்
கலைஞர் குறித்து
நூறு கவிஞர்களின்
கவிதைகளைத் திரட்டி
'கலைஞர் 100 கவிதைகள் 100'
என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன்
பாவேந்தர் பாரதிதாசன்,
கவியோகி சுத்தானந்த பாரதியார்,
நாமக்கல் கவிஞர், முனைவர் மு.வ,
முனைவர் இலக்குவனார் தொடங்கி
நிகழ்காலக் கவிஞர்கள் வரை
நீண்டு நிறைகிறது தொகுப்பு
இது
எவருக்கும் எட்டாதது
வேறெந்தத்
தலைவருக்கும் கிட்டாதது
07.08.2024 அன்று
தமது முகாம் அலுவலகத்தில்
முதலமைச்சர்
அதை வெளியிடுகிறார்
திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி
முதல்நூல் பெறுகிறார்
நான்
முன்னிலை வகிக்கிறேன்
கலைஞரின்
தமிழ் அன்புக்கு
என் காணிக்கை இது"
இவ்வாறு வைரமுத்து அந்த எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications