தலைவர் கருத்து சொந்த கருத்தா? 4 எம்எல்ஏக்களில் 2 பேர் அண்ணாமலைக்கு எதிரா? என்னங்க நடக்குது பாஜகவில்?

ஒருவர் கட்சி கூட்டத்திலும்.. இன்னொருவர் பொதுவில் செய்தியாளர் சந்திப்பிலும் இப்படி பேசி இருக்கிறார் என்பது பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் என்னதான் நடக்கிறது? எப்படி 2 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து கட்சி தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசி உள்ளனர் என்று கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணிக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் இருக்கும் நிர்வாகிகள் சிலரே கூட அண்ணாமலை கருத்துக்கு எதிராக பதில் அளித்துள்ளனர்.

நான் ஜெயலலிதா போல, கருணாநிதி போல தலைவர்.. அவர்களை போல நடந்து கொள்வேன் என்று அண்ணாமலை கூறி இருந்த நிலையில் அவரின் கருத்துக்கு எதிராகவே கட்சியை சேர்ந்த 2 மூத்த எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அண்ணாமலை சொன்னது என்ன?

அண்ணாமலை சொன்னது என்ன?

நேற்று நடந்த பாஜக கூட்டத்தில்அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசினார். அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

சலாம்

சலாம்

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

பதிலடி

பதிலடி

இந்த கூட்டத்திலேயே அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன் , இது பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தானே. கூட்டணி குறித்து ஆலோசனை செய்யும் கூட்டம் இல்லையே. நமது கட்சியில் கூட்டணி முடிவுகளை தேசிய தலைமை தானே முடிவு எடுக்கும். நமது கட்சி தேசிய கட்சி என்பதை மறக்க வேண்டாம், தேசிய தலைமை சொல்வதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டும். இந்த பிரச்னையை இங்கே பேச வேண்டியதே இல்லையே. அது இப்போது சப்ஜெக்ட் இல்லையே. மாநில கோர் கமிட்டி மையக் குழு கூட்டம் நடக்கும்போது தானே இதை பேச வேண்டும். ஏன் இப்போது பேசுகிறீர்கள் , என்று கூறி இருக்கிறாராம். இதனால் பாஜக கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

தற்போது அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நயினார் நாகேந்திரன், தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.. தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறி உள்ளார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் யாரும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. அதனால் தனித்து போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது. கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

என்ன இப்படி சொல்கிறார்?

என்ன இப்படி சொல்கிறார்?

நான் ஜெயலலிதா போல, கருணாநிதி போல தலைவர்.. அவர்களை போல நடந்து கொள்வேன் என்று அண்ணாமலை கூறி இருந்த நிலையில் அவரின் கருத்துக்கு எதிராகவே கட்சியை சேர்ந்த 2 மூத்த எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதிலும் கட்சியில் 2 மூத்த எம்எல்ஏக்கள் இப்படி அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளனர். ஒருவர் கட்சி கூட்டத்திலும்.. இன்னொருவர் பொதுவில் செய்தியாளர் சந்திப்பிலும் இப்படி பேசி இருக்கிறார் என்பது பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் என்னதான் நடக்கிறது என்ற கேள்விகளை இது எழுப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+