கோவை பாஜவா? தமிழக பாஜகவா?.. மதஅரசியலை பாஜக செய்வதாக சொன்னால் குழந்தைகூட சிரிக்கும்: வினோஜ் பி.செல்வம்
வினோஜ் பி செல்வம் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்
சென்னை: "பாஜக மத அரசியல் செய்வதாக சொன்னால் குழந்தைகூட சிரிக்கும்.. பாஜக தமிழகத்தில் உள்ளே வந்துடும், உள்ளே வந்துடும் என்று பயமுறுத்தி பயமுறுத்தியே, ஐஎஸ்ஐஎஸ், அல்உமா, இங்கே வளர்ந்துட்டு இருக்காங்க.. இதுதான் தமிழக அரசு செய்த சாதனை" என்று வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை பந்த் தொடர்பாக தமிழக பாஜக எடுத்துள்ள 2 வேறு நிலைப்பாட்டின் மூலம், கட்சியில் சீனியர்கள், ஜூனியர்கள் இடையேயான பனிப்போர், கோவை கார் சிலிண்டர் விவகாரத்தில் வெடித்துள்ளதோ என்ற சந்தேகம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
அதற்கேற்றபடி, கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு அண்ணாமலை சென்ற நிலையில், வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் போன்றோர் அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து, தமிழக பாஜகவின் இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம், நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் இவைதான்:

வானதி
"பேரணியில் வானதி சீனிவாசனால் கலந்து கொள்ள முடியவில்லை.. அவர் இப்போது அகில இந்திய தலைவராகிவிட்டார்... வடகிழக்கு பகுதிகளில் தேர்தல் நடக்கக்கூடிய காலக்கட்டம் இது.. அங்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், அவரால் இங்கு கலந்து கொள்ள முடியவில்லை.. முன்னாள் எம்பி சிபி ராதாகிருஷ்ணன்.. கோவை மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டவர்.. 1998 வெடிவிபத்துக்கு பிறகு, மக்கள் அவரைதான் நம்பி தேர்ந்தெடுத்தார்கள்.. அந்த அளவுக்கு மக்களின் வலியையும், வேதனையையும் புரிந்து கொண்ட நபர் சிபி ராதாகிருஷ்ணன்..

கோவை பாஜக
நன்றாக யோசித்துதான், பந்த்தை அவர் அறிவிக்கிறார்.. ஆனால், அங்குள்ள வணிகர்கள் சிலர், இப்போதுதான் மீண்டு வருகிறோம், பந்த் இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதும், அவர்களின் உணர்வை புரிந்துகொண்டு வேறு முடிவு எடுக்கிறார்.. எப்போதுமே மக்களின் உணர்வை பிரதிபலிக்கக்கூடிய கட்சிதான் பாஜக.. கோவைக்கு நான்தான் பொறுப்பாளர் என்று செந்தில்பாலாஜி சொல்கிறாரே, அப்படியானால், ஸ்டாலினுக்கும் கோவைக்கும் சம்பந்தம் இல்லை என்று எடுத்து கொள்ளலாமா? அதுபோலதான், கோவை பாஜகவையும், தமிழக பாஜகவையும் பிரித்து பார்த்து பேசுகிறார்கள்..

பொய் குற்றச்சாட்டு
உளவுத்துறையில் 60 சதவீதம் ஒரே மதத்தினர் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை சொல்கிறார் என்றால், அது உண்மையாகத்தான் இருக்கும்.. காரணம், அவர் எது பேசினாலும் ஆதாரத்தை கையில் வைத்து கொண்டுதான் பேசுகிறார்.. அப்படி ஒரு குற்றச்சாட்டு பொய் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் ஆதாரத்தை காட்டுங்களேன்.. அண்ணாமலை மற்ற அரசியல் தலைவர் போல கிடையாது.. மணல் அள்ளியோ, பிளேடு போட்டோ, பிக் பாக்கெட் செய்தோ, திமுககாரர்களை போல மேல வந்தவர் கிடையாது..

அல் உமா
அவர் ஒரு ஐபிஎஸ்ஸாக வேலைபார்த்து, நிறைய தீவிரவாத சம்பவங்களை எதிர்த்து கையாண்டு, திரு.மோடி அவர்களால் ஈர்க்கப்பட்டு, தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வந்த நபர்.. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஆதாரம் இருக்கும்.. அது இல்லாமல் எதையுமே பேசமாட்டார்.. பாஜக மத அரசியல் செய்வதாக சொன்னால் குழந்தைகூட சிரிக்கும்.. பாஜக தமிழகத்தில் உள்ளே வந்துடும், உள்ளே வந்துடும் என்று பயமுறுத்தி பயமுறுத்தியே, ஐஎஸ்ஐஎஸ், அல்உமா, இங்கே வளர்ந்துட்டு இருக்காங்க.. இதுதான் தமிழக அரசு செய்த சாதனை.. என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications