நிறைய "கான்ஸ்பிரசி" பரப்பினார்களே.. கரூர் தொடர்பாக இதுவரை ஒரு கேஸ் கூட போடாத விஜய்.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் விவகாரம் தொடர்பாக இதுவரை விஜய் தரப்பில் இருந்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தினமும் புலி வருது கதையாக இன்று வழக்கு பதியப்படும், நாளை பதியப்படும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் வழக்கு எதுவும் முறையாக பதிவு செய்யப்படவில்லை.

1. விஜய் தரப்பில் மூத்த தவெக நிர்வாகிகள் சிபிஐ விசாரணை கேட்டார்கள். ஆனால் விஜய் சார்பாக அல்லது தவெக மூத்த நிர்வாகிகள் சார்பாக யாரும் இதுவரை வழக்கு பதியவில்லை.

TVK Vijay

2. ஆதவ் அர்ஜுனா சிபிஐ விசாரணை வேண்டும் என்பது தொடர்பாக கோரிக்கைகளை வைத்து இருந்தார். ஆனால் அவரும் மனுதாக்கல் செய்யவில்லை. அவர் மனுதாக்கல் செய்வதாக தகவல்கள் வந்தன. ஆனால் செய்யவில்லை.

3. கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் மக்கள் பலர் பலியான நிலையில், இதுவரை விஜய் உட்பட தவெக மூத்த நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 10 நாட்கள் ஆகியும் விஜய் தவெக நிர்வாகிகள் யாருமே பாதிக்கப்பட்ட குடும்பங்களை கூட பார்க்காதது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

4. முக்கியமாக இதில் விஜய் கரூர் செல்ல கூடாது என்று போலீஸ் சொல்லவில்லை. அரசு சொல்லவில்லை. தேவையின்றி இதில் வழக்கு போட்டு அனுமதி கேட்டு கரூர் சொல்லப்போவதாக விஜய் தரப்பு சொல்கிறது. ஆனால் விஜய் தரப்பு இன்னும் வழக்கும் தொடுக்கவில்லை. கரூர் செல்லவும் விரும்பவில்லை. இதில் விஜய் வழக்கு தொடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் வழக்கு தொடுக்கப்படவில்லை.

5. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எங்கே பதுங்கி இருக்கிறார் என்ற கேள்வி கடுமையாக நிலவி வருகிறது. அவரின் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி ஆகிவிட்டது. அந்த மனுவிற்கு எதிராக மேல்முறையீடு இன்னும் செய்யப்படவில்லை.

6. கரூர் சம்பவம் நடந்த அன்று திருச்சி பைபாஸில் அவரின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அவர் போனை ஆன் செய்யவில்லை. அப்படியே தலைமறைவாகிவிட்டார். அங்கிருந்து அவர் ஏற்காடு சென்றதாக நிறைய தகவல்கள் கூறுகின்றன. அங்கே ரிசார்ட் ஒன்றில் அவர் பதுங்கி உள்ளதாக கூறப்பட்டது.அதன்பின் அவர் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் காட்டிற்கு ஓடிவிட்டார் என்று ஒரு பக்கம் கூறப்பட்டது. அவர் வங்கக்கடலில் கப்பல் ஒன்றில் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

7. அவர் மேல்முறையீடு செய்வதாக செய்திகள் வந்தன. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை அவர் எந்த விதமான மேல்முறையீடும் செய்யவில்லை.

8. இதில் விஜய் உட்பட பலரும் கான்ஸ்பிரசி தியரியை பரப்பினார்கள். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார். இப்படி எல்லாம் பேசிய விஜய் - கரூர் திமுகவிற்கு எதிராகவோ.. அல்லது திமுக சதி என்று கூறியோ இதுவரை எந்த வழக்கும் தொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+