தவெக கட்சி கொடியை பயன்படுத்தாதீங்க.. அவசரமாக ஆர்டர் போட்ட விஜய்.. கோட் படம்.. நடந்தது என்ன?
சென்னை: நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய படத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்பான காட்சிகளை பயன்படுத்த கூடாது.. படத்தின் ப்ரோமோஷனிலும் இப்படி பயன்படுத்த கூடாது நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.
அதன்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக தியேட்டர் முன் ப்ளக்ஸ் வைக்கலாம்.. ஆனால் கொடி ஏற்றக்கூடாது என்று விஜய் கூறி உள்ளாராம். வாய் மொழி உத்தரவாக விஜய் இதை கூறியுள்ளாராம். இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.

அதன்படி பொது இடங்களில் கட்சி கொடி ஏற்ற அனுமதி வேண்டும். அதனால் தேவை இல்லாத சிக்கல் வரும். அதோடு இந்த படம் என்பது விஜயுடையது மட்டுமல்ல. தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இயக்குனர் வரை இது பலரின் படம். இதனால் இதில் தன்னுடைய கட்சி கொடியை பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று வாய் மொழி உத்தரவாக விஜய் இதை கூறியுள்ளாராம்.
மாநாடு: தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் தனது கட்சிக்கான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் மாநாட்டிற்கான விண்ணப்பம் தரபட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளோம்; ஓரிரு நாட்களில் முடிவு சொல்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்; முடிவு தெரிந்தவுடன் மாநாட்டின் தேதி குறித்து தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என்று கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலே, கீழ் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கொடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது.
இவை போர் யானைகள் ஆகும். நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். அதை சுற்றி ஸ்டார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது. போர் வீரம், தோழமை, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ இதை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதே சமயம் கொடிக்கான விளக்கத்தை மாநில மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் கூறி உள்ளார்.
திமுக ஆளும் கட்சி: பெரும்பாலும் திமுக ஆளும் கட்சி என்பதால் அவர்களை எதிர்த்தே விஜய் அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முதல் நாள் காலை 9 மணி ஷோவிற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முறையாக தயாரிப்பாளர் சார்பாக தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல் இயக்குனர் சார்பாகவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் தமிழக அரசு அரசியல் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், விஜய் படத்துக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டு உள்ளனர். அதன்படி, சிறப்பு காட்சி தந்தால் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அசம்பாவிதங்கள் நடக்க கூடாது, நிலைமை கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று மட்டும் உறுதி செய்ய கேட்டு உள்ளனர். அதன் பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் வேறுபாடுகளை பார்க்காமல் அனுமதி கொடுக்க கூறி உள்ளார்.
இந்த நிலையில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்ததற்காக தமிழக அரசுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் 'தி கோட்' திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications