விஜயதரணி டீல்? பொன்னார் டுமீல்! பாஜகவில் ஒரு புதிய ஆளுநர் ரெடி!
சென்னை: விஜயதரணியின் வருகையால் பொன் ராதாகிருஷ்ணனின் இடம் பறிபோக உள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
கடந்த இரண்டு தினங்களாகக் கன்னியாகுமரி காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதற்கு இணையாக பாஜக தொண்டர்கள் வெற்றிக் களிப்பில் உள்ளனர். இரண்டுக்கும் ஒரே காரணம் தான். அது என்ன? தமிழ்நாட்டிற்கே தெரிந்த தகவல்தான்.

விளவங்கோடு காங். சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார். ஆகவே, இந்த இரண்டு கட்சி தொண்டர்களும் புதிய உற்சாகத்தில் மிதக்கின்றனர்.
சில மாதங்கள் முன்னதாக பிரதமர் மோடியைப் பார்த்து தமிழ்நாட்டிற்குள் உங்களால் நுழையவே முடியாது என்று ராகுல் காந்தி சவால் விட்டிருந்தார். அந்தச் சவாலுக்கு விஜயதரணி மூலம் பதிலளித்துள்ளது பாஜக தலைமை. அதுவும் காங். சட்டமன்ற உறுப்பினரையே தூக்கி இருக்கிறது. ஆகவே,தான் பாஜகவினர் வெற்றிக் களிப்பின் உச்சத்தில் உள்ளனர்.
காங். கட்சி கன்னியாகுமரி தொண்டர்கள் விஜயதரணிக்கு எதிராகவே இருந்தனர். அவருக்கு உட்கட்சியில் பெரிய செல்வாக்கு இல்லை. அவர் வெளியேறினால், புதிய முகம் யாரேனும் உள்ளே வரலாம் எனக் காத்துக் கொண்டிருந்தனர். இப்போது ரூட் கிளியர் ஆகிவிட்டது. அதற்காக அந்தக் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி மழையில் நனைந்து வருகிறார்கள். பட்டாசு போட்டுக் கொண்டாடுகிறார்கள்.

3 ஆண்டுகளுக்கு முன்பே விஜயதரணி பாஜகவுக்குப் போக இருந்ததாகத் தகவல் கசிந்தது. அப்போது அவர் அளித்த ஒரு பேட்டி இப்போது வைரலாகி வருகிறது. செய்தியாளர் நெருப்பில்லாமல் புகையாதே? உங்களிடம் பாஜக தரப்பிலிருந்து யாரேனும் பேசினார்களா? எனக் கேள்வி எழுப்பியதற்கு அவர். 'நான் ஒரு நெருப்பு. இந்த நெருப்புக்கூட யாராவது வந்து பேசுவார்களா?' என்று ருத்ர தாண்டவம் ஆடி இருந்தார்.
மேலும்,'திட்டமிட்டு அவதூறு செய்வதாகப் பத்திரிகைகள் மீது குற்றஞ்சாட்டினார். குற்றவியல் வழக்குப் போடுவேன்' மிரட்டல் வேறு விடுத்திருந்தார்.
அவர் பாஜகவுக்குத் தாவப்போகிறார் என்று தகவல் பரவிய சில நாள்கள் முன்னதாக தான் குஷ்பு பாஜகவில் சேர்ந்திருந்தார். அவரைத் தொடர்ந்து இவரும் போய்விடுவார் என்றே ஊகங்கள் கிளம்பின. பாஜகவில் குஷ்பு இணைந்த போது அதைக் கடுமையாக விமர்சித்தவர் விஜயதரணி. அதனாலேயே நான் பாஜகவினரால் டார்கெட் செய்யப்படுகிறேன் என்று முட்டுக் கொடுத்தார்.

இது ஏதோ முதன்முறை அல்ல. 2016இல் அதிமுகவுக்குத் தாவ உள்ளதாகத் தகவல் பரவியது. அப்போதும் அவர் அமைதியாகவே இருந்தார். ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவுக்குப் போக உள்ளார் எனக் காங்கிரஸ் கட்சியினரே பேசி வந்தனர்.
இவர் காங்கிரஸ் கட்சிக்குள் வந்த நாள் முதலே, கோஷ்டி சர்ச்சை இவரைப் பின்தொடர்ந்து வருகிறது. 2015 தமிழ்நாடு காங். தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார். மகிளா காங்கிரஸ் தலைவியாக விஜயதரணி இருந்தார். அந்தக் காலங்களில் இருவருக்குள் மிகப்பெரிய கோஷ்டி பூசல் இருந்தது.
ஆகவேதான் இந்த முறை ஈரோடு கிழக்கிலிருந்து வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் நிகழ்வை விஜயதரணி புறக்கணித்தார்.

காங். எம்.பி. ஆக வசந்தகுமார் மறைந்த உடன் எம்.பி சீட் கேட்டு வற்புறுத்தினார் விஜயதரணி. கட்சி மேலிடம் பிடிகொடுக்கவில்லை. 'என்னைவிட ஜூனியர் விஜய் வசந்த். அவருக்கு எம்.எல்.ஏ சீட்டு கொடுங்கள்' என்று அழுத்தம் தந்தார். அனுதாப அலையை மனதில் வைத்து விஜய்யைக் களம் இறக்கியது காங்கிரஸ் தலைமை.
அதில், மிகப்பெரிய கடுப்பு விஜயதரணிக்கு. 1999 இல் இருந்தே நாடாளுமன்றம் செல்வதே குறியாகக் கொண்டிருந்தார் விஜயதரணி. அந்தக் கனவு அவரது கண்களை மறைக்கத் தொடங்கியது. இந்த முறை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒரு துண்டு போட்டார். அதுவும் நடக்கவில்லை. அந்த வாய்ப்பு செல்வப் பெருந்தகைக்குச் சென்றது இவர் அப்செட் ஆனார்.
கட்சி இவருக்கு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக நிற்க வாய்ப்புக் கொடுத்தது. 2011 இல் விளவங்கோடு மக்கள் லீமாரோஸை புறக்கணித்துவிட்டு இவருக்கு வெற்றி வாய்ப்பை அளித்தனர். லீமாரோஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நின்ற வேட்பாளர்.

2006இல் திருவட்டார் தொகுதியில் நின்று வென்றவர். எளிமையின் அடையாளம். பத்து பைசா பணம் சேர்க்காத தூய்மையான சட்டமன்ற உறுப்பினராக, அரசுப் பேருந்தில் சட்டமன்றத்திற்கு வந்து சென்றவர். அவரை தோல்வியடையச் செய்துவிட்டு, விஜயதரணியைத் தேர்ந்தெடுத்தார்கள் விளவங்கோடு மக்கள்.
ஒரு முறை அல்ல, மூன்று முறை. விஜயதரணியின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது. தேர்ந்தெடுத்த மக்களைத் தூக்கி எறிந்துவிட்டு, பதவிக்காக பாஜக பக்கம் சென்றுள்ளார் என்று தொகுதி மக்கள் வருந்துகிறார்கள்.
விஜயதரணிக்கு இதனால் கிடைக்கப் போவது என்ன? வருகின்ற மக்களவைத் தேர்தலில் எம்.பி. ஆக நிற்பதற்கு ஒரு வாய்ப்பு. ஒருவேளை தேர்தலில் தோல்வியைத் தழுவினால், பாஜக சார்பில் வேறு மாநிலத்திலிருந்து ராஜ்ய சபா சீட்டு.
அப்படி என்றால் கன்னியாகுமரி பொன் ராதாகிருஷ்ணனின் நிலை? 2014 முதல் அத்தொகுதியின் பாஜகவின் நாடாளுமன்றத்தின் முகமாக இருப்பவர் அவர்தானே? ஆமாம். அவருக்கு வேட்டு வைத்துவிட்டது பாஜக. வழக்கம் போல் அவருக்காக ஆளுநர் நாற்காலி ஒன்று வேறு மாநிலத்தில் காத்திருக்கிறது என்கிறார்கள்.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications