"60 பீஸ்".. சைலண்ட்டா போய்ட்டீங்களே.. "அந்த" விஷயத்தை பேச மாட்டீங்களா.. திமுகவை கேட்பது யார் பாருங்க
இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் திமுக மீது குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: இங்கே இந்தியே திணிக்கவில்லை.. திணிக்கப்படாத இந்திக்கு திமுக கேள்வி எழுப்புகிறதே, தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை கேரளாவில் நரபலி செய்தார்களே, திமுக ஏன் வாய் திறக்கவில்லை என்று அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவில் அவ்வப்போது நரபலி சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான் என்றாலும், கேரள சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
பத்தனம்திட்டாவில், தமிழகத்தை சேர்ந்த பெண் உட்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.. எர்ணாகுளத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்..

பத்மா + ரோஸ்லின்
தர்மபுரியை சேர்ந்தவர் பத்மா, சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர். இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின், 50 என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனதால், அவர்களது செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகுதான் இருவரும் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பீஸ் பீஸ்கள்
பிழைப்புக்காக எத்தனையோ பேர் கேரள மாநிலங்களுக்கு சென்று அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.. அப்படித்தான் இந்த பெண்களும் சென்றிருக்கிறார்கள்.. கொடூர நரபலி சம்பவ எதிரொலியால், தமிழர்கள் பலரும் அச்சத்தின் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி வர ஆரம்பித்துள்ளனர்.. ஆனால் இந்த சம்பவத்தை எந்த ஒரு கட்சியும் பெரிதாக பேசாத நிலையில், கண்டிக்காத நிலையில், கண்டுகொள்ளாத நிலையில், இந்து மக்கள் கட்சி கையில் எடுத்துள்ளது.

60+ பீஸ்
ஆனால், இந்த விஷயத்திலும் திமுகவையே சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: "திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இல்லாத சொல்லாத ஒன்றை இந்தி திணிப்பு என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் ஈவேரா பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடுகின்றனர். அப்படியே திமுகவினர் அதை கொண்டாடிய போது தான் தென்காசி அருகே பட்டியலின மக்கள் வாழும் ஊரையே ஒதுக்கி வைத்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது.

60 பீஸ்கள்
பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டங்கள் கூட தரமுடியாது என மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. கேரளாவில் ஒரு தமிழ் பெண் உட்பட 2 பெண்கள் நரபலி என்ற பெயரில் 60 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர். சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். இது அனைத்தும் வெறும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தான்" என்று கூறியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications