அன்று ஈரோட்டில் தொடங்கிய “டேமேஜ்”.. அங்கேயே “ரிப்பேர்” செய்யுமா தேமுதிக? போட்டியிட காரணமே இதுதானாம்
தேமுதிக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டதற்கான தேவை என்ன என்பது குறித்து விளக்கி இருக்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கவனத்தை ஈர்த்தது. மறுபக்கம் விஜயகாந்தின் தேமுதிகவும் இதில் தனித்து போட்டியிட்டு உள்ளது. தேமுதிக இந்த தேர்தலில் போட்டியிட்டதற்கான தேவை என்ன என்பது குறித்து விளக்கி இருக்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு ஆகியோர் போட்டியிட்டனர்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகாவும், தேமுதிக வேட்பாளராக ஆனந்தும் நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் தேமுதிக இதில் தனித்து போட்டியிடுவதற்கான காரணம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் ஜென்ராம் பேசியுள்ளார்.

தேமுதிக போட்டியிட்ட காரணம்
அதில், "அதிமுக கூட்டணியில் இருந்து விலகி நிற்க முடிவு செய்துவிட்டார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு கூட்டணிக்கு உள்ளேயே இடம் வேண்டும். இன்னும் நாங்கள் உயிர்ப்போடுதான் இருக்கிறோம் என்று திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு அல்லது பாஜக போன்ற கட்சிகளுக்கு மெய்பித்து காட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

நம்பிக்கையோடு தேமுதிக
எவ்வளவு வாக்குகள் வாங்கினால் அதை பொருட்படுத்துவார்கள் என்று அவர்கள்தான் கணக்கிட வேண்டும். நீங்கள் எவ்வளவு வாக்குகளை வாங்கினாலும் உங்களை அவர்கள் பரிசீலிக்கப்போவதே இல்லை என்று நாம் ஒரு கருத்தை சொல்லிவிட்டு செல்லலாம். ஆனால் அவர்கள் களத்தில் நம்பிக்கையோடு நிற்கிறார்கள்.

ஈரோட்டில் தொடங்கிய சேதம்
10 ஆயிரம் வாக்குகளை தேமுதிக பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதுபோக ஈரோட்டில்தான் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு 2014 தேர்தலிலேயே தேமுதிகவுக்கான சேதம் தொடங்கியது. சிலர் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கின்ற சூழலிலேயே 4, 5 பேர் தேமுதிகவில் இருந்து திமுகவிற்கும் இடம் மாறினார்.

தேமுதிக கட்சித் தாவல்
இந்த கட்சித் தாவல் ஈரோட்டில்தான் தொடங்கியது. ஈரோட்டில் கட்சியை விட்டு சென்றவர்களாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் விஜயகாந்தின் பங்கேற்பு இல்லை என்றாலும் அவரது ஆணைக்கு இணங்க கட்சி நிலைத்து இருக்கும் என்பது போன்ற பல செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு பிறகு கட்சிகளுக்கு சொல்வதற்கான முயற்சியாக அவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

தயார்படுத்திக்கொள்ளும் தேமுதிக
ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஒருவிதமான மாற்றத்திற்குள் தேமுதிக உள்ளது. எனவே இதுபோன்ற தேர்தல்களில் போட்டியிட்டு அவர்கள் மாறுதல்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தற்செயலாக வந்தது.

எல்லா கட்சிக்கும் நெருக்கடி
இந்த நெருக்கடிகள் எல்லாம் எல்லா கட்சிகளுக்கு உள்ளேயும் இருக்கிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிரச்சனை அதிமுகவுக்கு இருந்தது. தொடர்ந்து 20 மாதகால ஆட்சி மக்களிடம் இருந்து நல்ல முழுமையான வரவேற்பு கிடைக்கிறதா என்பதை அறிவதற்கான சூழல் திமுகவுக்கு இருந்தது. நாம் தமிழர் முன்பை விட 2021 சட்டமன்றத் தேர்தலில் முன்னேறி உள்ளார்கள்.

நாம் தமிழர், மநீம நோக்கம்
அந்த வளர்ச்சி மேலும் முன்னேறி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் நாம் தமிழர் கட்சிக்கு இருந்தது. இப்படி எல்லோருக்கும் ஒரு தேவை இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் இதை உண்மையிலேயே இடைத்தேர்தலாக மட்டும் பார்க்காமல் எதிர்கால அரசியலுக்கான உத்தியாகவும் இதை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன்." என்றார்.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications