டிஸ்சார்ஜ் ஆன 3 நாளில்! விஜயகாந்தை கூட்டத்திற்கு அழைத்து வந்தது ஏன்? பதவி மாற்றப்பட்டது ஏன்? பின்னணி
சென்னை: நடிகர் விஜயகாந்த் மாற்றப்பட்டு தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டதற்கு பின் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 11ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமாவது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்படுகிறது.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
எனினும் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம் என்று கூறியது. அதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக 1 வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்.. முழுமையாக உடல்நிலை குணமாகி அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
போட்டோ வெளியிட்டார்: இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. வதந்திகளை எல்லாம் உடைக்கும் வகையில், வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படத்தை விஜயகாந்த் மனைவி பிரேமலதா வெளியிட்டு உள்ளார்.
டிஸ்சார்ஜ்: இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 11ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் 3 நாட்களில் அதாவது நேற்று டிசம்பர் 14ம் தேதி விஜயகாந்த் தலைமையில் தேமுதிக பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விஜயகாந்த் உடல்நிலை மோசமான நிலையில்.. பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் ஆகி உள்ளார்.
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பிரேமலதாவை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரேமலதா கையை தூக்கி விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
3 நாட்களில் முடிவு என்ன காரணம்: 3 நாட்களில் இந்த முடிவை எடுக்க என்ன காரணம், விஜயகாந்த் பொது இடத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
1. விஜயகாந்தை தொண்டர்கள், ரசிகர்கள் சந்தித்து நீண்ட காலம் ஆகிறது. இதனால் அவர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களின் வருத்தத்தை போக்கும் விதமாக அவரை பொதுக்கூட்டத்திற்கு கொண்டு வந்துள்ளனர் .
2. விஜயகாந்த் உடல்நிலை பற்றி வதந்திகள் பரவுகிறது. அவரின் உடல்நிலை பற்றி பல பொய்கள் பரவுகின்றன. அந்த பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரை பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர் .
3. உடல்நிலை மோசமாகி விட்டதால்.. அவர் இனி வரும் காலங்களில் ஓய்வு எடுப்பார். அரசியல் நிகழ்வு, சினிமா நிகழ்வு எதிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் ஓய்வு எடுக்கும் முன் தொண்டர்களை சந்திக்கும் விதமாக பொது மேடைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
4. இது பொதுச்செயலாளரை மாற்றும் கூட்டம் என்பதால் தற்போது உள்ள பொதுச்செயலாளர் கூட்டத்தில் இருக்க வேண்டும். அவரின் ஒப்புதல் இருக்க வேண்டும். அதன் காரணமாக விஜயகாந்த் வருகை அவசியம் என்பதால், அவரை அழைத்து வந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications