ஸ்டாலினுக்கு.. கடைசி நேரத்தில் வந்த "திடீர்" குழப்பம்.. லேட்டாக வெளியான லிஸ்ட்.. பின்னணி காரணம்!
திமுகவின் வேட்பாளர் லிஸ்ட் தாமதமானது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது
சென்னை: திமுகவின் வேட்பாளர் லிஸ்ட் ஏன் இவ்ளோ லேட்டாக வெளிவந்துள்ளது என்ற சந்தேகம் இன்னும் அடங்கவே இல்லை..!
Recommended Video
கடந்த வாரமே திமுகவின் வேட்பாளர் லிஸ்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.. பிறகு நேற்று முன்தினம் வெளியாகும் என்றார்கள்.. வரவில்லை..
நேற்று வெளியாகும் என்றார்கள்.. நேற்று சிவராத்திரி நல்ல நாள் என்பதால், லிஸ்ட் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள்.. நேற்றும் வெளியாகவில்லை..

தேர்தல் வேலை
அதிமுக முந்திக் கொண்டு அனைத்து தேர்தல் வேலையையும் செய்யும்போது, திமுக ஏன் தாமதப்படுத்துகிறது? அதிலும் வேட்பாளர் லிஸ்ட்டில் ஏன் தாமதப்படுத்துகிறது? என்ற சந்தேகம் எழுந்து கொண்டே இருந்தது. இன்றைய தினம் லிஸ்ட் வெளியாகியும் அந்த குழப்பம் போகவே இல்லை. எனினும் இது சம்பந்தமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் எழுந்து
வருகின்றன..

காங்கிரஸ்
எல்லாத்துக்கும் காரணம் தொகுதிகள் ஒதுக்கீடு பிரச்சனைதான் போலும்.. பொன்னேரியை காங்கிரசுக்கு ஒதுக்க கூடாது என்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. ஆனாலும் காங்கிரசுக்கு தரப்பட்டு விட்டது. பிறகு நாங்குநேரியை திமுக பிரமுகர்கள் கேட்டார்கள்.. அதையும், காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரனுக்காக, தரப்பட்டு விட்டது.. மேலும் இந்த தொகுதி வேண்டும் என்று அழகிரி கேட்டு கொண்டே இருந்ததால், திமுக தலைமை பரிசீலித்ததாக தெரிகிறது.

தொகுதிகள்
இப்படி, முக்கிய தொகுதிகளை அதிலும் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால்தான் சலசலப்பு இதுவரை நிகழ்ந்து வந்திருப்பதாக தெரிகிறது.. ஒரு சில இடங்களில் திமுகவினர் தீ குளிக்கும் முயற்சியிலும் ஈடுபடவும்தான் விஷயம் சீரியஸாகி இருக்கிறது.. ஸ்டாலினே அதிர்ச்சியாகி விட்டாராம்.. அதனால்தான், லிஸ்ட்டை உடனடியாக வெளியிடவில்லை என்றும், இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்தால் நன்றாக இருக்கும் என்றும் புது முடிவு எடுக்க வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது...

சிபாரிசுகள்
இதற்கும் சிபாரிசுகள் நாலாபக்கமிருந்தும் வரவும், ஸ்டாலின் சற்று அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.. இதற்கு பிறகே லிஸ்ட் ஆராயப்பட்டு, பரிசீலிக்கப்பட்டுள்ளது.. ஆனால், எந்த வேட்பாளர் மனசும் காயப்பட்டு விடக்கூடாது என்றும், தொண்டர்கள் சோர்வு அடைந்துவிட கூடாது என்றும், கூட்டணிகளும் அதிருப்தி அடைந்துவிடக்கூடாது என்றும் ஸ்டாலின் பொறுமையாக இந்த விஷயத்தை கையாண்டுள்ளார்.. அதன்பிறகே இன்றைய தினம் லிஸ்ட் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications