வாங்க சிஸ்டர்.. முகத்தை கேமராவில் காட்டுங்க.. எல்லை மீறிய அண்ணாமலை.. விட்டு விளாசிய திமுக
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர் சந்திப்பில் அநாகரீகமாக நடந்து கொண்டது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. திமுகவும் அண்ணாமலையின் இந்த செயலுக்கு கடும் பதிலடியை கொடுத்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டார். பாஜக அதிமுக உட்கட்சி மோதல் குறித்து ஆலோசனை செய்வதற்காக அவர் டெல்லி புறப்பட்டார்.

தமிழ்நாட்டில் பாஜக அதிமுக மோதல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதல் கசப்பான நிலையை அடைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கள்தான் இந்த மோதல் அனைத்திற்கும் காரணமாக பார்க்கப்படுகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி பேசினார். ஊழலுக்கு சிறை சென்ற முதல்வர் என்று கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார். அதிமுகவுடன் கூட்டணி இருக்கும் போதே அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரை அண்ணாமலை விமர்சனம் செய்தது அதிமுகவினர் இடையே கடுமையான எதிர்வினைகளை பெற்றுக்கொடுத்தது.
இதற்கு அதிமுகவின் கடுமையான பதிலடி கொடுத்தனர். அதோடு அந்த மோதலின் போதே அதிமுகவிற்கு பாஜகவின் டாப் நிர்வாகிகள் பலர் சென்றனர். பாஜகவில் இருந்த பலர் அதிமுகவிற்கு சென்றது பாஜக கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மோதல் அடுத்த கட்டம்: அதை தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் ஒரு படி மேலே போய்.. உச்சம் அடைந்தது. அதன்படி பாஜக தலைவர் அண்ணாமலை அறிஞர் அண்ணா - தேவர் இடையே நடந்த சம்பவம் ஒன்றை குறித்து வரலாற்றுக்கு புறம்பான கருத்துக்களை கூறினார். முழு ஆதாரமற்ற தகவல்களை அவர் கொடுத்தார்.
அவரின் பேச்சு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. அவர் சொன்ன வார்த்தைகள் அதிமுகவினரை கோபத்திற்கு தள்ளியது. இதற்கு எதிராக அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில்தான் அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் , அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாகவும்.. இது தன்னுடைய கருத்து இல்லை. அதிமுகவின் அதிகாரபூர்வ் கருத்து என்றும் அதிரடியாக கூறினார்.
அதன்பின் கட்சி கூட்டத்திலும் கூட கூட்டணியை முறிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுக - பாஜக உறவு அதிரடியாக முறிந்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி புறப்பட்டார். பாஜக அதிமுக உட்கட்சி மோதல் குறித்து ஆலோசனை செய்வதற்காக அவர் டெல்லி புறப்பட்டார். நேற்று டெல்லிக்கு செல்லும் முன் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
அத்துமீறிய அண்ணாமலை: அண்ணாமலை நேற்று செய்தியாளர் சந்திப்பில் அநாகரீகமாக நடந்து கொண்டது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பெண் செய்தியாளர் ஒருவர்.. நீங்கள் ஒருவேளை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? பாஜகவில் நீடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசியல் தலைவர்கள் பொதுவாக ஆம் என்பார்கள்.. இல்லை என்பார்கள்.. இதற்கு எல்லாம் பதில் அளிக்க மாட்டேன் என்று கூட கோபம் அடைவார்கள். ஆனால் அண்ணாமலை அதைவிட்டுவிட்டு அந்த பெண் செய்தியாளரை கேமரா முன் அவமானம் செய்தார். அவரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தேவையின்றி.. சிஸ்டர் இங்கே வாங்க.. கேமரா முன் வாங்க.. உங்க முகத்தை பார்க்கட்டும்.. இப்படி கேள்வி கேட்பவர் யார் என்பதை பார்க்கட்டும் என்று கூறினார்.
அவரின் இந்த செயலுக்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அண்ணாமலையின் பேச்சுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. திமுகவும் அண்ணாமலையின் இந்த செயலுக்கு கடும் பதிலடியை கொடுத்துள்ளது.

திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை செய்துள்ள போஸ்டில், என்ன ஒரு ஆணவம்? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத்தெரியவில்லை, இதில் வெட்டி வியாக்கியானம் வேறு. பாஜக நிர்வாகிகளை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. ஆர்எஸ்எஸ் இவருக்கு என்ன தகுதி என இவரை தலைவராக்கியது?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications