செஸ் ஒலிம்பியாட்.. விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படம் இடம்பெற வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் படம் இடம்பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பிரதமர், குடியரசுத் தலைவர் படம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக சென்னை முழுக்க மாஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இல்லை என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதற்கு பாஜக நிர்வாகிகள் சிலர் சென்னையில் தமிழ்நாடு அரசின் போஸ்டர்களில் மோடி படத்தை ஒட்டிய சம்பவங்களும் கூட நடைபெற்றன. அதை திமுக ஐடி விங்கும் கூட நீக்கியது. ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இல்லை என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஒலிம்பியாட் மோடி
இந்த நிலையில்தான் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணா என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை மதுரை கிளையில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் ராஜேஷ் தரப்பு வைத்த வாதத்தில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம், பெயர் இல்லை.

செஸ் ஒலிம்பியாட்
இது பிரதமர் மோடி துவங்கி வைக்கும் நிகழ்வு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வு. தமிழ்நாட்டை ஆளும் கட்சி இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறது. பிரதமர், குடியரசுத் தலைவரின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது விரோதமானது. இது சட்டத்திற்கு எதிரானது. இதற்கு தமிழ்நாடு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும், என்று கூறப்பட்டது.

மோடி படம்
இதில் நீதிபதி தெரிவித்த கருத்தில், இந்த நிகழ்வு நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. பல நாட்டு போட்டியாளர்கள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். ரஷ்யாவில் நடக்க வேண்டியது சென்னையில் நடப்பது நமக்குத்தான் பெருமை, இதில் ஏன் குடியரசுத் தலைவர், பிரதமர் படம் இடம்பெறவில்லை. சர்வதேச நிகழ்வை நாம் சேர்ந்து நடத்த வேண்டும், என்று குறிப்பிட்டார். இதில் தமிழ்நாடு அரசு தரப்பு வைத்த வாதத்தில், இந்த நிகழ்வை தமிழ்நாடு அரசு ஒருங்கிணைத்து இருக்கிறது.

நமக்குத்தான் பெருமை
பிரதமர் மோடியின் வருகை 22ம் தேதிதான் உறுதி செய்யப்பட்டது. இதனால் பழைய போஸ்டர்களில் அவரின் பெயர், படம் இடம்பெற முடியவில்லை. மற்றபடி இன்று மாநில அரசு சார்பாக கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மற்றபடி குடியரசுத் தலைவர் தேர்தல் காரணமாக அவரின் புகைப்படத்தை வைக்க முடியாமல் போய்விட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போட்டோ ஏன் இல்லை?
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் பிரதமர் கலந்து கொள்கிறாரோ, இல்லையோ அவரின் படத்தை வைத்து இருக்கலாமே. இது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் நாட்டை முன்னிறுத்த வேண்டும். இதில் ஏன் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை, என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Recommended Video

தீர்ப்பு
இதையடுத்து சற்று முன் வழங்கப்பட்ட தீர்ப்பில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் படம் இடம்பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பிரதமர், குடியரசுத் தலைவர் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் சர்வதேச விழாக்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று ஏற்கனவே சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இன்று மதுரை உயர் நீதிமன்ற கிளை இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications