குற்ற உணர்ச்சியில் பேசுகிறேன்! கொந்தளித்த நடிகர் கிஷோர்?
சென்னை: நடிகர் கிஷோர் விவசாயிகள் ஆதார விலை குறித்து முன்வைத்த கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
வடநாட்டில் விவசாயிகளின் போராட்டம் வீரியமாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அந்தப் போராட்டத்தைத் தென் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பெரியதாக எடுத்துக் கொண்டதைப் போல் தெரியவில்லை.

பஞ்சாப் - ஹரியானா இடையே உள்ள ஷம்பு எல்லைப் பகுதியில் விவசாயிகள் மாட்டு வண்டியில் கொட்டை அடித்து அங்கே தங்கிப் போராடி வருகின்றனர். அவர்கள் டெல்லிக்குள் நுழைவதற்காக முற்றுகையிட்டுக் காத்திருக்கிறார்கள்.
ஆளும் அரசு துணை ராணுவப்படை, காவல்படை ஆகியவற்றை வைத்து கண்ணீர்ப் புகைக்குண்டு, துப்பாக்கிச் சூடு என ஆயுதத்தின் மூலம் விவசாயிகளிடம் பேசி வருகிறது.
பெரியதாக அரசியல் கட்சி சார்பற்று இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. 5 அம்ச கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக விளைபொருள்களுக்கு நியாயமான ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். சில ஆண்டுகள் முன்பாக போராட்டக்காரர்கள் மீது போடப்பட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

ஆனால், பெரிதாக அரசு அவர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினையை அரசியல் கட்சிகளே அதிகம் கண்டு கொள்ளவில்லை.
அப்படி உள்ளபோது நடிகர் கிஷோர், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். திரையில் ஒரு வில்லனாக உள்ள அவர், களத்தில் விவசாயிகளின் நண்பனாக நிற்கிறார்.
அதற்குக் காரணம், அவரே ஒரு இயற்கை விவசாயி. அதனால், ஒரு விவசாயிகளின் வலியும் வேதனையும் புரிந்து பேசி வருகிறார்.

இந்த மாதிரியான ஒரு கொள்கைக்குள் அவர் வர ஷரனா இயக்கம்தான் காரணம் என்கிறார். கர்நாடகாவில் இந்த இயக்கம் பல ஆண்டுகள் முன்னால் மிகத் தீவிரமாக இயங்கியது.
அதாவது ஆன்மீகம் மற்றும் இலக்கியம், அரசியல் கலந்த சமூக இயக்கம் இது. இதில் ஈடுபட்டு வந்த ஒரு மன்னர் தனது சொத்து சுகங்களை எல்லாம் விட்டுவிட்டு ரோட்டுக்கு வந்தார். தான் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்தார்.
எல்லா சாதிக்காரர்களும் லிங்கம் போட்டுக் கொண்டால், அவர்கள் எல்லாம் சிவனின் ஷரனா ஆகிவிடுவார்கள். அப்படி என்று அந்த இயக்கத்தினர் சொன்னார்கள்.

அந்த இயக்கத்தின் பாதிப்பால் தான், காலம் கடந்து ஈர்க்கப்பட்டதால் இந்த உணர்வு தனக்குள் வந்திருக்கலாம் என்கிறார் கிஷோர்.
அவரிடம் உங்களின் வாழ்க்கைத் தத்துவம்தான் என்ன என்று கேட்டால், "தனது வாழ்க்கைக்கு என்று தனியாக ஒரு தத்துவம் ஒன்று கிடையாது. பரிணாமம் அடைந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. தத்துவமும் அப்படித்தான். நிலையான தத்துவம் என்று எனக்கு ஒன்று கிடையாது" என்கிறார்.
பலரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொள்கையை உடனே பேசுவார்கள். ஆனால், கிஷோர் அப்படி இல்லை. மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கைதான் நான் படிக்கும் தத்துவம் என்கிறார்.

மேலும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவர் முன்வைக்கும் தகவல்கள் அதிர்ச்சியாக உள்ளன.
"இந்தியா விடுதலை அடைந்தது முதல் எந்த ஒரு போராட்டத்திற்கு இந்தளவுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்ததே இல்லை. ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் அதைச் செய்கிறார்கள். எனக்கு எங்கே கோபம் வந்தது என்றால், பலர் சமூகவலைத்தளத்தில் விவசாயிகளை மோசமாக விமர்சிக்கிறார்கள்.
அவர்கள் யார்? நம் நாட்டு விவசாயிகள். அவர்கள் இல்லை என்றால், சாப்பாடே நமக்கு இல்லை. அவர்கள் உழைப்பில் நாம் உயிர் வாழ்கிறோம்.

சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் ஒரு ஆசிரியரின் சம்பளமும் ஒரு குவிண்டால் அரிசியின் விலையும் சம அளவில் தான் இருந்தன. இன்றைக்குச் சுதந்திரம் பெற்று 75 வருடங்களைக் கடந்துவிட்டோம்.
குவிண்டால் விலை 2200 ரூபாய் உள்ளது. கடந்த வருடம் 100ரூபாய் ஏற்றி உள்ளனர். ஆனால், ஆசிரியரின் சம்பளம் 50 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன? நாம் விவசாயிகளை எந்தளவுக்கு வஞ்சிக்கிறோம் என்பது புரிகிறதா?
இப்போது சொல்லுங்கள், இது நியாயமா? இங்கே எங்குப் பிரச்சினை வருகிறது என்றால், விவசாயி தட்டிக் கேட்ட மாட்டேன் என்கிறான். அதான் பிரச்சினை. இன்றைக்கு உள்ள விவசாய தலைவர்கள் வீரியமாக இல்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் இல்லை.

இங்கே உள்ள விவசாயிகள் போராட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு உள்ள அரசியல் கட்டமைப்பை எதிர்த்துப் போராட முடியுமா? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை அரசியல்வாதிகள் கொன்றுவிட்டார்கள்.
உங்களுக்கு மிரட்டல்கள் வரவில்லையா? என்றால் வருகிறது. நாம் ஒன்று செய்ய முடியாது. வருங்காலத் தலைமுறைக்கு நான் பதில் சொல்ல வேண்டுமே ? அந்தக் குற்ற உணர்ச்சியில் எதிர்த்துப் பேசுகிறேன்" என்கிறார்.

ஜனங்கள் காசில்தான் நாம் சாப்பிடுகிறோம். அவர்களுக்காக நாம் பேச வேண்டும் என்கிறார்.
உங்களுக்கு இது தொடர்பாக மிரட்டல்கள் வரவில்லையா என்றால், "வரும்தான். அது ஒரு பக்கம் நடக்கும்" என்கிறார்.


-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications