அவ்வளோ சண்டை இருந்தும் பாருங்களேன்.. ஓபிஎஸ் டீமை நெகிழ வைத்த ஜெயக்குமார்.. "இதுதான்" இப்போ தேவை
சென்னை: அதிமுகவில் கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில் ஜெயக்குமார் செய்த காரியம் ஒன்று ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
அதிமுகவில் எப்படியாவது.. எதையாவது செய்து ஒற்றை தலைமை அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முயன்று கொண்டு இருக்கிறார். எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் எடப்பாடி தரப்பு தீர்க்கமாக இருக்கிறது.
நேற்று அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தலைமை கழக கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு எப்படியாவது தடை வாங்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசனை செய்து வருகிறது

அதிமுக பொதுக்குழு
இந்த நிலையில் நேற்று அதிமுக தலைமைக்குழு கூட்டத்திற்கு முன் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது. அதிமுக அலுவலக்திற்கு வெளியே ஓபிஎஸ், இபிஎஸ் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெரிய பேனரில் இருந்து ஓபிஎஸ் முகம் மட்டும் கிழித்து எடுக்கப்பட்டது. கத்தியை வைத்து அங்கிருந்த நிர்வாகி ஒருவர் ஓபிஎஸ் முகத்தை கிழித்து எடுத்தார். துரோகி ஓபிஎஸ் ஒழிக.. அதிமுக துரோகி ஓபிஎஸ் ஒழிக என்று கூறி பேனர் கிழிக்கப்பட்டது.

ஜெயக்குமார்
இந்த நிலையில் நேற்று அதிமுக தலைமைக்குழு முடிந்த பின் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது தவறான விஷயம். அவரின் முகம் அடங்கிய பேனர் வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும், என்று கூறினார். ஆனால் அதே சமயம் ஓபிஎஸ் ஒரு துரோகத்தின் அடையாளம். அதனால்தான் அவரின் பெயர் நமது அம்மா நாளிதழில் இருந்து நீக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஓபிஎஸ் பேனர்
இந்த நிலையில்தான் நேற்று மாலையே ஓபிஎஸ் பேனர் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. ஜெயக்குமார் வாக்கு கொடுத்தது போலவே நேற்று பேனர் வைக்கப்பட்டது. பிற்பகலில் புதிய பேனர் அடிக்கப்பட்டு அதே இடத்தில் பொருத்தப்பட்டது. அதில் ஓபிஎஸ் - இபிஎஸ் புகைப்படங்கள் இரண்டும் இடம்பெற்று இருந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்களை இந்த செயல் நெகிழ வைத்துள்ளது.

கடும் மோதல்
ஓபிஎஸ் - ஜெயக்குமார் இடையே கடும் மோதல் உள்ளது. ஜெயக்குமார் காரில் கூட கடந்த வாரம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு ஜெயக்குமார் தன்மையாக செயல்பட்டு ஓபிஎஸ் பேனர் வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அவரின் இந்த செயல்தான் இப்போது அதிமுகவில் தேவை.. மோதல் இருந்தாலும் நாகரீகத்தோடு நிர்வாகிகள் செயல்படுவதே இப்போதைய தேவை என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications