சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி.. இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டது அவருக்கே தெரியாது -கதிர்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலின் ஏன் பிரதமராக வேண்டும் என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கே தெரியாது எனக் கூறுகிறார் அந்த நூலின் ஆசிரியர் கதிர்.

இது போன்ற புத்தகத்தை ஸ்டாலின் ஒரு வேளை விரும்பாமலும் போகலாம் என்பதற்காக அவரிடம் இது குறித்து தாம் சொல்லவில்லை என்கிறார் அவர்.

இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார், ஸ்டாலின் ஏன் பிரதமராக வேண்டும் என்ற நூலின் ஆசிரியர் கதிர். அதன் விவரம் பின்வருமாறு;

அந்த தமிழ்நாடு வீரரிடம் ஜாக்கிரதை.. பாக். வீரர்களை எச்சரிக்கும் முன்னாள் ஜாம்பவான்.. செம பின்னணி! அந்த தமிழ்நாடு வீரரிடம் ஜாக்கிரதை.. பாக். வீரர்களை எச்சரிக்கும் முன்னாள் ஜாம்பவான்.. செம பின்னணி!

2018-ம் ஆண்டு

2018-ம் ஆண்டு


''ஸ்டாலின் ஏன் பிரதமராக வேண்டும் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டே நினைத்தேன். ஆனால் அதற்கான கால சூழ்நிலை அமையாததால் அந்தப் பணிகள் தள்ளிப்போய் கொண்டே இருந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த நூலை எழுதத் தொடங்கிய நான், சொந்தமாகவே பப்ளிஷும் செய்திருக்கிறேன். 132 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த சின்னஞ்சிறிய நூலில் ஸ்டாலினிடம் இருக்கும் பிரதமர் பதவிக்கான தகுதிகளை பட்டியிலிட்டிருக்கிறேன்.''

செயல் வேகம்

செயல் வேகம்

''நான் திமுககாரன் அல்ல, அதனால் தான் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு கூட திமுக முக்கியஸ்தர்கள் யாரையும் அழைக்கவில்லை. நண்பர்கள் என்ற அடிப்படையில் எம்.எம்.அப்துல்லாவும், கனிமொழி சோமுவும் பங்கேற்றார்கள். இந்தியாவில் உள்ள எந்த தலைவரிடமும் இல்லாத ஒரு செயல் வேகம் ஸ்டாலினிடம் மட்டுமே இருக்கிறது. மேயராக இருந்த போது தொடங்கி இப்போது வரை நிர்வாகப் பணிகளில் அவர் காட்டும் செயல் வேகத்திற்கு பல உதாரணங்களை கூற முடியும்.''

ஸ்டாலினுக்கு தெரியாது

ஸ்டாலினுக்கு தெரியாது

''ஸ்டாலின் ஏன் பிரதமராக வேண்டும் என்ற கேள்விக்கு ஸ்டாலின் ஏன் பிரதமராக ஆகக்கூடாது என்பது தான் எனது ஒற்றை வரி பதிலாக இருக்கும். இதில் சிறப்பு என்னவென்றால், இப்படி ஒரு நூல் வெளியிடுகிறோம் என்பதை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நான் தெரிவிக்கவே இல்லை. இவ்வாறு இப்படி இந்த தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட உள்ள தகவலை நான் கூறி, ஒரு வேளை அவர் விரும்பாமல் வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்ற ஐயம் இருந்ததால் அவரது கவனத்துக்கே நான் இதைக் கொண்டு செல்லவில்லை.''

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

''உத்திரப்பிரதேசம், கர்நாடக, மாநிலங்களில் இந்த புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை நூலின் ஆசிரியர் என்ற முறையிலும் வெளியீட்டாளர் என்ற முறையிலும் உறுதியாக கூற முடியும். இந்த புத்தகத்தின் ரேப்பரை (முகப்பு பக்கம்) வைத்து வட மாநிலங்களை சேர்ந்த சிலர் ட்ரோல் செய்வதையும் நான் அறிவேன்.'' எனக் கூறி முடித்தார் ஸ்டாலின் ஏன் பிரதமராக வேண்டும் என்ற நூலின் ஆசிரியர் கதிர். சரி உங்களை பற்றிய பின்னணி கூறுங்கள் என நாம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர்,

நாகை மாவட்டம்

நாகை மாவட்டம்

சென்னையில்

English summary
why do we need Mks as Pm of india book author Kathir interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X