தீபாவளி வருது.. அதுக்கு முன்னாடியே போய் தங்கம் வாங்கிடுங்க.. இதுதான் ரொம்ப முக்கியம்.. கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை $2,598.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் இப்போது ஃபெட் தலைவர் ஜெரோம் பவலின் கருத்துகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

gold rate silver investment

இந்தியாவில் தங்கத்தின் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பைப் பொறுத்தது. சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் விலை சரியும் போதெல்லாம் உயரும். அதேபோல் அமெரிக்க டாலர் மதிப்பில் உயர்வு ஏற்பட்டால், தங்கத்தின் மதிப்பு குறையும்.

தங்கத்தை வாங்கிடுங்க: தீபாவளி நெருங்கி வரும் நிலையில்.. அதற்கு முன்பாக மக்கள் பலரும் தங்கம் வாங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதற்கு முக்கியமான சில காரணங்களை அவர்கள் அடிக்கி உள்ளனர்.

சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.

2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல நாடுகளில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றமும் கூட தங்க விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த போர்கள் காரணமாக உலக நாடுகள் பலதும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தீபாவளி நெருங்கி வரும் நிலையில்.. அதற்கு முன்பாக மக்கள் பலரும் தங்கம் வாங்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதற்கு முக்கியமான சில காரணங்களை அவர்கள் அடிக்கி உள்ளனர். தீபாவளிக்கு முன் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று கூறப்படுவதால் இப்போதே தங்கத்தில் முதலீடு செய்வது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தீபாவளி சமயத்தில் மக்கள் பலரும் அதிகமாக தங்கம் வாங்குவார்கள். இதனால் அப்போது தங்கத்தின் விலை இன்னும் உயரும். அதற்கு முன் தங்கம் வாங்கிக்கொள்வது சரியாக இருக்கும். தற்போது டாலரின் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயரும்.

அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். உலகளாவிய போர் மற்றும் பொருளாதார பதட்டங்கள், தங்கத்தின் தேவை மற்றும் விற்பனை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளால் தங்க விலை வரும் வாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும். நாளை தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்தாலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும்.

2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CNBC Awaaz நிகழ்ச்சி உரையாடலில் பேசிய Vighnaharta Gold இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார். சர்வதேச அளவில் போர்கள் நடக்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. வடகொரியா - தென் கொரியா போர் , உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் - ஈரான் போர் போன்ற போர்கள் தற்போது நடக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+