சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"விக்கெட்" விழுந்தாச்சே.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த வைத்திலிங்கம்.. எடப்பாடிக்கு தூக்கம் போச்சே

சசிகலா சந்திப்பு குறித்து வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: வைத்திலிங்கம் படுகுஷியில் இருப்பதாக தெரிகிறது.. பலநாள் கனவு, விரைவில் கூடிவர உள்ள நிலையில், தஞ்சை மண்டல அதிமுகவினர் முகத்தில் இன்று நிம்மதி தென்பட்டுள்ளதாம்.

வைத்திலிங்கம்.. அதிமுகவின் சீனியர் தலைவர். முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர்.. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்.. ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்..

இப்போது முழுக்க முழுக்க ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்.. ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததில் இருந்து, ஓபிஎஸ்ஸுக்கு எல்லாமே வைத்திலிங்கம்தான்.. சட்டரீதியான ஆலோசனைகள், நிர்வாகிகள் சந்திப்பு, பொதுக்கூட்டம், என பெரும்பாலான ஐடியாக்களையும் ஓபிஎஸ்ஸுக்கு சொல்லி வருபவர் வைத்திலிங்கம்தான் என்றும் சொல்லப்படுகிறது..

ஸ்வீட் எடு கொண்டாடு! சின்னம்மா வாழ்த்துங்கம்மா.. சசிகலாவிடம் உருகிய வைத்திலிங்கம்! இது ட்ரைலர் தான்! ஸ்வீட் எடு கொண்டாடு! சின்னம்மா வாழ்த்துங்கம்மா.. சசிகலாவிடம் உருகிய வைத்திலிங்கம்! இது ட்ரைலர் தான்!

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

வைத்திலிங்கத்தை பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் இருந்து, சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்... சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டாவை சேர்ந்தவர்.. சிறைக்குச் செல்லும் வரை, அவரின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.. ஜெயலலிதா இருந்தபோதே, கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கிய தளபதியாக வலம்வந்தவர்.. அதிமுகவின் 7 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர்.. அதாவது ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர் தான் வைத்திலிங்கம்..

 டரியல் பிளான்

டரியல் பிளான்

இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்திருக்கிறார்.. ஆனால், 2016 தேர்தல் முதல்கொண்டுதான் வைத்திலிங்கம் அரசியல் லேசாக மாற தொடங்கியது.. அப்போது அவர் தோல்வி அடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டது, ஆறுதல் தந்தது.. காரணம், அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர் வைத்திலிங்கம்.. டெல்டாவின் ஆல் டைம் நம்பிக்கை நட்சத்திரமும்கூட.. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்து, டெல்டா அதிமுகவை நிமிர வைத்தவர் வைத்திலிங்கம் என்பதையும் மறுக்க முடியாது.

 புள்ளி வெச்சு கோலம்

புள்ளி வெச்சு கோலம்

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைந்தபிறகு, கொங்கு புள்ளிகள் தலைதூக்கினர்.. இதனால் ஓபிஎஸ்ஸே ஓரங்கட்டப்பட்டார்.. ஓபிஎஸ்ஸே ஓரங்கட்டப்படும் நிலைமை என்றால், வைத்திலிங்கமும் இதே நிலைமைதான்.. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எப்படியும் எம்பி பதவி கிடைக்கும் என்று கனவு கண்டார்.. ஆனால், ஓபிஎஸ் மகனுக்கு அந்த வாய்ப்பு சென்றுவிடவும் அப்செட் ஆகிவிட்டார்.. போதாக்குறைக்கு தென்மண்டங்களைவிட, கொங்கு மண்டலத்தையே எடப்பாடி அரசு தூக்கி வளர்த்ததும், வைத்திலிங்கத்தின் அதிருப்திக்கு இன்னொரு காரணமாகிவிட்டது..

 கப்சிப் மோடு

கப்சிப் மோடு

இதனால் கப்சிப் மோடுக்கு போன வைத்திலிங்கம், பெரிய அளவு ஆக்டிவ்வாக இல்லாமல் ஒதுங்கிதான் இருந்தார்.. சசிகலா ஆடியோ அரசியல் நடந்தபோது, அதிமுக புள்ளிகள், சசிகலா பக்கம் தாவ போவதாக செய்திகள் கசிந்தபோது, அதில் முதல்பெயராக அடிபட்டதே வைத்திலிங்கம்தான்.. இவர் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் சாய்வார் என்று கிசுகிசுக்கப்பட்டது.. ஆனால், ஓபிஎஸ் போலவே இவரும் சசிகலா விஷயத்தில் அமைதி காத்தார்.. தற்போது ஒற்றை தலைமை வெடித்ததுமே, ஓபிஎஸ்ஸை ஓடோடிச்சென்று தாங்கி பிடித்தது வைத்திலிங்கம்தான்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

 குலுங்கி குலுங்கி சிரிப்பு

குலுங்கி குலுங்கி சிரிப்பு

அப்போது செய்தியாளர்கள், "யாராக இருந்தாலும் தங்களுக்கு ஆதரவு தரலாம் என்று பொதுவாக சொல்கிறீர்களே, சசிகலா உட்படவா? சசிகலா பெயரை சொல்ல ஏன் இப்படி தயங்குறீங்க?" என்று கேட்டனர்.. அதற்கு ஓபிஎஸ், "ஏங்க, யாராக இருந்தாலும் என்றால், சின்னம்மாவும் அதில் இருக்காங்க, டிடிவி தினகரனும் அதில் இருக்கிறார்.. போதுமா, இப்ப திருப்தியா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.. ஓபிஎஸ் இப்படி சொன்னதுமே அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த வைத்திலிங்கம் குலுங்கி குலுங்கி நீண்ட சிரித்து கொண்டே இருந்தார்.. இந்த குஷிக்கு அர்த்தம் ஓபிஎஸ் தரப்புக்கு மட்டுமே அன்று தெரிந்திருக்கக்கூடும்..

 தித்திப்பு நியூஸ்

தித்திப்பு நியூஸ்

இந்நிலையில், இன்றைய தினம் சசிகலா வைத்திலிங்கத்துக்கு ஸ்வீட் தந்துள்ளார்.. யதார்த்தமா கல்யாணத்துக்கு போனேன்.. அங்கே யதார்த்தமாக சின்னமாவை சந்தித்தேன் என்று விளக்கம் தந்துள்ளார்.. பல நாட்களுக்கு பிறகு, இந்த யதார்த்தமான சந்திப்பு நடந்திருந்தாலும், இது சசிகலாவுக்கான முதல் விக்கெட் என்றும் சொல்லலாம்.. எடப்பாடிக்கு தரும் முதல் ஷாக் என்றும் சொல்லலாம்.. ஓபிஎஸ் பக்கம் வலு சேர்ப்பதுடன், தன்னுடைய தஞ்சை மண்டல செல்வாக்கும் இதன்மூலம் வைத்திலிங்கத்துக்கு உயர தொடங்கி உள்ளதாகவே தெரிகிறது.. அடுத்து "யதார்த்தமான" சந்திக்க போவது "அவராக" இருக்குமோ?.. தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Why does aiadmk Vaithilingam meet Sasikala and when will OPS team join with ttv dinakaranசசிகலா சந்திப்பு குறித்து வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X