சீட்டு பத்தி பேசாதீங்க.. வாக்கு வங்கியை பாருங்க.. அண்ணாமலை அப்படி பேசியது ஏன்? இப்படி ஒரு காரணமா?
சென்னை; எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல, எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம் என்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பின் வேறு முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

தேர்தல் இறுதிக்கட்டம்; நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.
கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த 6ம் கட்ட தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
பாஜக கூட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று தமிழக பாஜக சார்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்தார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள, முதல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஆகும் இது .
அண்ணாமலை தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று இதில் ஆலோசனை செய்யப்பட்டது. கட்சியில் நிர்வாகிகள் இடையே
கருத்து வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் அதை களையும் வகையில் ஆலோசனை செய்தனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அண்ணாமலை பேச்சு; இதில் பேசிய அண்ணாமலை, தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே இருப்பவர்கள் கீழே வரலாம். கீழே இருப்பவர்கள் மேலே போகலாம். அதைப் பற்றி எல்லாம் நாம் கவலை கொள்ளக்கூடாது. நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம்.
பாஜக 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்; ஜூன் 4ஆம் தேதி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருங்கள். சென்னை; எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல, எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம்.
வெற்றியை கொண்டாட தயாராகுங்கள். இது காங்கிரசின் கோட்டை எனக்கூறுவது ஜீன் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் இருக்காது. ஜூன் 4க்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது. தாமரை அடர்ந்து, படர்ந்து இருக்கும் காட்சியை ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் அனைவரும் பார்ப்பார்கள்., என்று கூறினார்.
என்ன காரணம்; எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல, எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம் என்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பின் வேறு முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி சிலர் பாஜக இப்போதே தமிழ்நாட்டில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது. அதனால்தான் அண்ணாமலை சீட் பற்றி பேசாமல் வாக்குகள் பற்றி பேசுகிறார் என்று கூறுகின்றனர்.
ஆனால் பாஜக வட்டாரத்தில் விசாரித்ததில், பாஜக கூட்டணியில், ஏசி சண்முகம், சௌமியா அன்புமணி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர், நயினார் கண்டிப்பாக நல்ல வாக்கு வங்கியை எடுப்பார்கள். இவர்களே எல்லோருமே ஸ்டார் வேட்பாளர்கள். வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் பிரபலம். இதனால் என்டிஏ வாக்கு வங்கி கண்டிப்பாக 10-15% அடையும். ஆனால் இடங்களை வெல்ல வாய்ப்பு குறைவு. அப்படி இருக்கும் 10.15 வாக்கு சதவிகிதத்தை தனது வெற்றியாக காட்டிக்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதை தனக்கு கீழ் ஏற்பட்டுள்ள வளர்ச்சியாக காட்ட நினைக்கிறார். இதன் காரணமாகவே வாக்கு சதவிகிதம் பற்றி அண்ணாமலை பேச தொடங்கி உள்ளார் என்கிறார்கள் பாஜகவினர்!












Click it and Unblock the Notifications