"விநோத சபலிஸ்ட்".. விடிகாலை அலாரம் வைத்து எழுந்து கொள்வாராம்.. மயிலாப்பூர் ரோட்டிலேயே 25 பெண்கள்..!
பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர்
சென்னை: ரோட்டில் எந்த பெண்ணாவது தனியாக வந்தால், அவரிடம் சில்மிஷம் செய்யாமல் இருக்கவே முடியாதாம்.. இப்படி ஒரு "விநோத பிறவி" சென்னையில் நடமாடி உள்ளது.
சில மாதங்களுக்கு சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த தினேஷ்குமார் என்ற இளைஞருக்கு 20 வயதாகிறது.. எழும்பூரில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலைசெய்து கொண்டே, ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி பெற்று வருகிறார்.
தினமும் வேலை முடிந்துவிட்டால், பெண்களை சீண்டுவதுதான் தினேஷின் ஹாபி.. அந்தவகையில், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதுடன் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருவார்..

வில்லிவாக்கம்
இதற்காகவே தினமும் காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கொள்வாராம்.. வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரை பைக்கில் செல்வாராம். எதிரே எந்த பெண் வந்தாலும், அவர்களை சீண்டி, சேட்டையும் செய்து வந்துள்ளார்.. தனியாக பெண் வந்தால், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த பெண்ணின் அருகில் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு, பிறகு வேகமாக ஓடிவந்து பைக் எடுத்து கொண்டு பறந்து விடுவாராம்.

சில்மிஷம்
இப்படித்தான் ஒரு பெண்ணை சீண்டி உள்ளார்.. அவர் ஒரு ராணுவ வீரரின் மகள் ஆவார்.. தினேஷ்குமார் அந்த பெண்ணை சில்மிஷம் செய்ததை, பின்னாடியே நடந்து வந்த, ராணுவ வீரரும் பார்த்துவிட்டார்.. அப்பறமென்ன.. போலீசுக்கு விஷயம் பறந்ததும், தினேஷ்குமாரை தட்டி தூக்கி கொண்டு சென்றனர். அப்போது ஒரு வாக்குமூலம்தந்தார்.. அதில், "எனக்கு சின்ன வயதில் இருந்தே இப்படி ஒரு ஆசை உண்டு.. எந்த பெண் தனியாக நடந்து சென்றாலும், சீண்டி பார்த்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.. இதுபோல், இதுவரை 150-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளேன்" என்றார்.

மயிலாப்பூர்
இதே மாதிரி ஒரு சபலிஸ்ட்தான் மறுபடியும் சிக்கி உள்ளார்.. மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது வந்த இளைஞர் ஒருவர், மாணவியை பின்னாடியே துரத்திக் கொண்டு போனார்.. பிறகு, ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.. அந்த பெண் கத்தி கூச்சலிடவும், பிறகு வேகமாக தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஜஸ்ட் 25
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை நடத்தினர். அந்த கேமராவில் சம்பந்தப்பட்ட இளைஞர் சிக்கினார்.. இவர் கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்.. பெயர் தனுஷ் .. 25 வயதாகிறதாம்.. இளம்பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது இவருக்கு பிடித்தமான விஷயமாம்.. அதிலும், மயிலாப்பூர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்தும், பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது..

தனுஷ்
இதுமாதிரி, 25-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளாராம்.. இதையடுத்து தனுஷை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இதில் கொடுமை என்னவென்றால், மாதவரத்தில் 9 வயது சிறுமி, இட்லி மாவு வாங்க போனாளாம்.. அந்த குழந்தையை கடைக்குள் தூக்கி சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளான் இந்த வெறிபிடித்தவன்.. இப்போது வியாபாரி தனுஷ், ஜெயிலுக்குள்ளேயே இருக்கிறார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications