முஷ்டி முறுக்கிய குதிரை! இதான் "ஸ்லம் போர்ட்".. திரும்பி பார்க்க வைத்த செஸ் ஒலிம்பியாட் போட்டோ! ஏன்?
சென்னை: சென்னை குடிசை மாற்று வாரியத்தில் வரையப்பட்டுள்ள குதிரை புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
சென்னை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. இன்று முதல் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னையில் சாலைகள் பல இடங்கள் புனரமைக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை நேப்பியர் பாலம் கூட செஸ் போர்ட் போன்ற கருப்பு வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டது.
பல இடங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான லோகோவான "தம்பி" குதிரை பொம்மை வைக்கப்பட்டு உள்ளது. சென்னை மெரினா தொடங்கி பல இடங்களில் இந்த பொம்மை வைக்கப்பட்டு உள்ளது.

குடிசை மாற்று வாரியம் '
இந்த நிலையில் சென்னை குடிசை மாற்று வாரியத்திலும் இந்த முறை குதிரை புகைப்படம் வரையப்பட்டுள்ளது. மற்ற தம்பி குதிரை படம் போல இல்லாமல் இந்த புகைப்படம் கொஞ்சம் கெத்தாக வரையப்பட்டு உள்ளது. கையில் முஷ்டி முறுக்கி நடந்து செல்வது போன்ற கம்பீரத்துடன் இந்த படம் வரையற்றப்பட்டுள்ளது. அதோடு குதிரை ஜிம்மிற்கு போனது போன்ற கம்பீரமான பைசப்ஸ் வைத்து காணப்படுகிறது.

குதிரை
பார்க்கவே தத்ரூபமாக இருக்கும் இந்த குதிரை மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகிறார்கள். இன்னும் பலர் இந்த குதிரை படம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அதாவது குடிசை மாற்று வாரியத்தின் அலுவலகத்தில் வரையப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் சர்வதேச நிகழ்வுகள் நடக்கும் போது குடிசைகளை துணி போட்டு மறைப்பார்கள். ஆனால் சென்னையில் அப்படி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

வளர்ச்சி
சென்னையின் வளர்ச்சியை குறிக்கும் விதமாக இந்த படம் அமைந்து உள்ளது என்று நெட்டிசன்கள் பலர் குறிப்பிட்டு உள்ளனர் . திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா இதை ஷேர் செய்துள்ளார். இதுதான் திராவிட மாடலுக்கும், கோமிய மாடலுக்கு உள்ள வேறுபாடு என்று கூறியுள்ளார். குஜராத்திற்கு அமெரிக்க அதிபர், இங்கிலாந்து பிரதமர் வந்த போது அங்கு குடிசைகள் வெள்ளை துணியால் மூடப்பட்டதை கிண்டல் செய்து டிஆர்பி ராஜா போஸ்ட் செய்துள்ளார்.
Recommended Video

மூட வேண்டியது
சென்னையில் அப்படி குடிசைகளை மூட வேண்டியது இல்லை. ஏனென்றால் நம்மிடம் குடிசை மாற்று வாரியம் உள்ளது என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில்தான் குடிசை மாற்று வாரியம் கொண்டு வரப்பட்டது. இதனால் சென்னையில் பெரும்பாலான குடிசைகள் நீக்கப்பட்டு அவர்களுக்கு வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில்தான் குடிசை மாற்று வாரியத்தில் வரையாடப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் குதிரை படம் வைரலாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications