ரிப்போர்ட் எங்கே.. கோட்டைக்கு பறக்கும் ஃபைல்கள்.. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை
சென்னை: அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.. வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் சென்னையில் விரிவான ஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு அனைத்து துறை அரசு செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது? செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு அனைத்து துறை அரசு செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது? செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற் கொள்கிறார்.

அட்வைஸ்
கடந்த ஆகஸ்ட் மாதம், முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால், என்ன விவாதிக்கப்பட்டது என்று தெரியவில்லை.. சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர்.. இதற்கு பிறகு, இன்று மீண்டும் அனைத்து செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்தை ஸ்டாலின் நடத்த உள்ளார்.. ஒவ்வொரு துறை ரீதியாகவும் முதல்வர் அறிக்கை கேட்டிருக்கிறார்..

ரிப்போர்ட் எங்கே?
அந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் நிலையில், அது தொடர்பான விவாதங்களும், ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. ஏற்கனவே சில மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், ஓரிரு அமைச்சர்களின் செயல்பாடுகள், குறித்த அதிருப்தி ரிப்போர்ட் ஒன்று முதல்வர் கைக்கு சென்றதாக கூறப்பட்டது. ஆனால், அதுபற்றி இதுவரை முதல்வர் தரப்பு எந்த முடிவையும் செய்யவில்லை.

கோட்டை + ரிப்போர்ட்
இப்போது துறைரீதியான ரிப்போர்ட் கோட்டைக்கு பறந்துள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சில அதிகாரிகள் கட்டம் கட்டப்படலாம் அல்லது கண்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதைதவிர, வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்துகிறார். குறிப்பாக வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது..

அட்வைஸ்
குறிப்பாக மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர் வாரும் பணிகள் குறித்தும் இதில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அப்போது அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை ஸ்டாலின் வழங்க உள்ளார். அத்துடன், துறைவாரியாக எந்த துறை பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்து, அந்த துறை மீது ஸ்பெஷல் கவனம் செலுத்தலாம் அல்லது அந்த துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடிவாகலாம் என்றும் சொல்கிறார்கள்..












Click it and Unblock the Notifications