பிடிஆர் இலாக்காவை மாற்ற.. 2 மாதம் முன்பே ஸ்டாலின் எடுத்த முடிவு? 6 பெரிய காரணங்கள் - பரபர பின்னணி
சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு உள்ளார். அவர் ஐடி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முதல் மாற்றமாக நேற்று முதல்நாள் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டார். ஆவடி நாசர் மீது பல்வேறு புகார்கள், சர்ச்சைகள் இருந்தன.

ஆனால் அவரை நீக்குவதற்கு இந்த புகார்கள், சர்ச்சைகளை தாண்டி அவரின் செயல்பாடுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆம்.. அவர் பால்வளத்துறையை மிக மோசமாக நடத்தியது. பால் தட்டுப்பாட்டை தவிர்க்க தவறியது, பால் உற்பத்தியில் நவீனங்களை புகுத்த தவறியது என்று மேற்கொண்ட சில செயல்பாடுகள்தான் இதற்கெல்லாம் காரணம்.
இந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய அமைச்சரவையில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாது.
இன்னொரு பக்கம் அமைச்சர் பதவியில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த 2 வருடமாகவே அமைச்சராக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போதே இவருக்கு அமைச்சரவை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.

3 மாதங்கள்: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி அமைச்சர் பதவியில் இருந்து மாற்றுவதாக வெளியான செய்திகளுக்கு இடையில் அந்த முடிவு கடந்த மார்ச் மாதமே எடுக்கப்பட்டு விட்டதாக கோட்டை வட்டார செய்திகள் நம்மிடம் தெரிவிக்கின்றன.
அதன்படி முதல்வர் ஸ்டாலின் பின்வரும் 6 விஷயங்களுக்காக அமைச்சரவை மாற்றம் பற்றி முடிவு எடுத்து இருக்கிறாராம்.
1. அமைச்சரவையை மாற்ற வேண்டும்.. 2 வருடம் ஆகிவிட்டது .. அதனால் புதிய லுக் அமைச்சரவைக்கு கொடுக்க வேண்டும் என்ற திட்டம் முதல்வருக்கு இருந்துள்ளது.
2. அமைச்சர்களின் பார்பார்மன்ஸ் அடிப்படையில் அவர்களை முக்கிய துறைக்கு அல்லது முக்கியம் குறைந்த துறைக்கு மாற்றுவது.
3. பிடிஆருக்கு அமைச்சரவை மாற்றப்படுவது என்பது.. அவர் ஒருவருக்காக செய்யப்படுவது அல்ல. மொத்தமாக செய்யப்படும் அமைச்சரவை மாற்றத்தில் அது ஒரு அங்கம். 2 ஆண்டுகள் முடிந்ததும் பெரிய அளவில் மாற்றம் செய்ய ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார்.
4. அரசு மீதான சில விமர்சனங்கள், சில திட்டங்களில் தாமதம், பாஜகவின் சில புகார்கள், ஆட்சி அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட கூடாது, ஊழலை தவிர்க்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக அமைச்சரவை மாற்றம் பற்றி யோசித்து வைத்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
5. லோக்சபா தேர்தலை மனதில் வைத்து உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் ஸ்டாலின் செயல்பட்டார். 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்போது அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
6. முதல்வர் ஸ்டாலின் கையில் அமைச்சர்கள் குறித்த பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் உள்ளது. பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது. இது தொடர்பான ரிப்போர்ட் ஒன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளதாம். உளவுத்துறை மூலமாக வழங்கப்பட்ட பர்பார்மன்ஸ் ரிப்போர்ட் மூலம் இந்த அமைச்சரவையை மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில்தான் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பிடிஆரின் ஆடியோ விவாகரத்திற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications