பார்முலா 4! உதயநிதி செய்த சம்பவம்! ஸ்டாலினுக்கு வந்த நம்பிக்கை! துணை முதல்வர் பதவி தர காரணமே அதுதான்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதில்.. ஸ்டாலினுக்கும் பெரிய ஆர்வம் இல்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தது.
உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. தமிழக அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதிலும் துணை முதல்வர் பதவி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா போகும் முன் துணை முதல்வர் பதவி பற்றி அறிவிக்காத ஸ்டாலின் திரும்பி வந்ததும் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார். இடைப்பட்ட நேரத்தில் அப்படி என்ன மாற்றம் நடந்தது. உதயநிதிக்கு இப்போது துணை முதல்வர் பதவி தர ஸ்டாலின் நினைப்பது ஏன் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
சவால்களை சமாளித்த உதயநிதி: ஃபார்முலா 4 கார் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறார். எந்த விதமாக பெரிய அசம்பாவிதமும் இல்லாமல்.. முறையான திட்டமிடலுடன், எப்.ஐ.ஏ. சான்று பெற்று.. தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக ஃபார்முலா 4 கார் பந்த்யத்தை நடத்தி காட்டி உள்ளது.
இரண்டு நாள் போட்டிகள் நாடு முழுக்க கவனம் பெற்றது. முக்கியமாக வடஇந்தியாவில் இந்த நிகழ்வு பெரிய ஹிட் அடித்தது. வடமாநிலங்களில் சாதாரண வாகனங்கள் செல்லவே சாலை சரியில்லை.. ஆனால தமிழ்நாட்டில் ஸ்ட்ரீட் ரெஸ் எல்லாம் வைக்கிறாங்க பாருங்க என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி போஸ்டுகளை செய்தனர்.
கிட்டத்தட்ட 3 பெரிய சவால்களை சமாளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வை மேற்கொண்டு உள்ளார்.
கார் பந்தயம் சவால் 1: ஃபார்முலா 4 கார் பந்த்யத்திற்கு எதிராக கடுமையான சட்ட வழக்குகள் நடந்தன. அரசியல் ரீதியாக, சட்ட ரீதியாக கடுமையான எதிர்ப்புகள் வந்தன. இதை எல்லாம் சமாளித்தே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டி உள்ளார். சென்னை தீவுத்திடலைச் சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி பா.ஜ. செய்தித்தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
அதேசமயம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை, பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
சவால் 2: இரண்டாவது சவால் சமூக வலைத்தளங்களில் இதை பற்றி செய்யப்பட்ட நெகட்டிவ் கமெண்ட். சென்னையில் ஒரு பெரிய போட்டி நடக்கிறது. இதனால் முதலீடுகள் வரும், உலக அளவில் சென்னை கவனிக்கப்படும் என்பதை பற்றி பேசாமல்.. சிலர் சென்னையில் நடக்கும் இந்த போட்டிகளை கிண்டல் செய்தனர். சென்னையில் மழை பெய்ய வேண்டும் என்பது தொடங்கி.. இதை கடுமையாக கிண்டல் செய்தனர்.
சவால் 3: இது போக எதிர்க்கட்சிகள் இந்த போட்டிக்கு எதிராக கடுமையாக காய்களை நகர்த்தி வந்தன. அதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை முன்னின்று நடத்துவதால்..இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கின. இதற்கு இடையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி காட்டி உள்ளார்.
ஸ்டாலின் வெளிநாடு: ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்த போது.. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளித்து.. வழக்குகளை எதிர்கொண்டு உதயநிதி இதை சாத்தியமாக்கி உள்ளார். முறையான திட்டமிடலுடன் நடைபெற்ற இந்த ரேஸ் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடைசி நொடி வரை ரேஸ் நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது.
FIA சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கார் ரேஸ் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் நிலவியது. கடைசி 6 மணி வரை ரேஸ் நடப்பதில் சிக்கல் இருந்தது.. 6 மணிக்கு கூட சில போட்டியாளர்கள் அறைக்கு திரும்பும் நிலை இருந்தது. கடைசி நேரத்தில் FIA அனுமதி கிடைத்து ஃபார்முலா 4 ரேஸ் தாமதமாக தொடங்கியது.
போட்டி தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன் அமைச்ச உதயநிதி ஸ்டாலினுக்கு போன் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில், FIA சான்றிதழ் பற்றியும், பாஜக தொடுத்த வழக்கின் நிலவரங்கள் பற்றியும் பேசி உள்ளார். அதில் வழக்கில் வந்த தீர்ப்பு என்பது பற்றியும் எப்ஐஏ சான்றிதழ் கிடைப்பதில் 19வது வளைவுதான் சிக்கலாக அமைந்து உள்ளது என்று விளக்கி உள்ளார். ஆனால் கண்டிப்பாக அனுமதி கிடைக்கும் என்றும் விளக்கி உள்ளார்.
அதன்பின் உதயநிதி ஸ்டாலின் அனுமதி வாங்குவதை உறுதி செய்து போட்டி நடப்பதை சாத்தியமாக்கினார் . தனி ஆளாக ஸ்டாலின் இல்லாத நேரத்தில் உதயநிதி இதை நடத்திக்காட்டியது திமுக பெரிய தலைகள் இடையே கவனம் பெற்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக கட்சிக்குள் சீனியர்கள் பலர் உதயநிதி ஸ்டாலினின் இந்த செயலை பாராட்டி உள்ளார்களாம்.
ஸ்டாலின் இல்லாத நேரத்தில் இந்த போட்டியை நடத்தியதோடு அமைச்சர்களுடன் ஆலோசனை.. பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தது போன்ற செயல்கள் காரணமாக இம்ப்ரஸ் ஆன ஸ்டாலின்.. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications