சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூம் கொடுக்கலையா ஜி? டெல்லிக்கு பறந்த "பாஜக" மெசேஜ்.. நறுக்குன்னு நட்டா போட்ட உத்தரவு.. முருகன் ஹாப்பி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. முக்கியமாக தமிழ்நாடு பாஜகவில் சில மாற்றங்களை செய்வதற்கு தயாராக டெல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு பாஜக எதிர்க்கட்சி போல தீவிரமாக செயல்பட்டாலும், அதன் தலைவர் அண்ணாமலை தினமும் செய்தியாளர்களை சந்தித்தாலும், அவர் வேறு விதமான அரசியல் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்றே அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை பேட்டிகளில் பேசுவதோடு சரி.. உட்கட்சி வளர்ச்சிக்கு பெரிதாக நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்று கட்சி நிர்வாகிகள் தரப்பு தெரிவிக்கிறது. முக்கியமாக வார்டு ரீதியாக நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டி உருவாக்குவது போன்ற பணிகளை அண்ணாமலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

திமுக பற்றி அவர் அதிகம் பேசுகிறார்.. அனால் உட்கட்சி விவகாரத்தில் பெரிதாக வேகமாக முடிவுகளை எடுப்பது இல்லை என்ற விவாதம்தான் தற்போது கட்சிக்குள் நிலவி வருகிறது.

கரையும் காங்.! ஒரே ஆப்ஷன் பாஜக தான்.. தென் மாநிலங்களுக்கு பாஜகவின் சூப்பர் திட்டம்! அமித் ஷா சூசகம்கரையும் காங்.! ஒரே ஆப்ஷன் பாஜக தான்.. தென் மாநிலங்களுக்கு பாஜகவின் சூப்பர் திட்டம்! அமித் ஷா சூசகம்

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் பாஜகவில் மீண்டும் இணை அமைச்சர் எல். முருகன் தலை தூக்க தொடங்கி உள்ளார் . அவர் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் பெரிதாக தமிழ்நாடு பாஜக விவகாரங்களில் தலைகாட்டவில்லை. அண்ணாமலைக்கு தலைவர் பதவி சென்றதில் இருந்தே எல். முருகன் எதுவும் பேசாமல் டீசண்ட்டாக ஒதுங்கிக்கொண்டார். அண்ணாமலையும் முழு சுதந்திரத்தோடு செயல்பட தொடங்கினார். இந்த நிலையில்தான் கட்சியில் அண்ணாமலைக்கு எதிராக சில குரல்கள் கேட்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னுரிமை

முன்னுரிமை

இந்த நிலையில்தான் கட்சியில் மீண்டும் எல். முருகனுக்கு முக்கியமான சில டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியை பின்னால் இருந்து இவர் வழி நடத்த வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. பொதுவாக நாடு முழுக்க உள்ள பாஜக அலுவலகங்களில் அம்மாநில பாஜக அமைச்சர்களுக்கு என்று தனியாக அறை இருக்கும். அமைச்சர்கள் வருகிறார்களோ இல்லையோ.. ஆனால் அமைச்சர்களுக்கு என்று தனியாக அறை இருக்கும்.

 தமிழ்நாட்டில் இல்லை

தமிழ்நாட்டில் இல்லை

ஆனால் தமிழ்நாட்டில் பாஜக இணை அமைச்சர் எல். முருகனுக்கு கமலாலயத்தில் அறை எதுவும் கொடுக்கப்படவில்லை. இதற்கு முன் முன்னாள் இணை அமைச்சர் பொன்னாருக்கு அறை இருந்தது போல முருகனுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயமே டெல்லிக்கு தெரியாதாம். இந்த நிலையில்தான் விஷயம் தெரிந்து பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா ஆகியோர் இதை பற்றி விசாரித்து இருக்கிறார்கள். ஏன் இப்படி என்று கேட்டுள்ளனர்.

 இல்லையா?

இல்லையா?

என்ன ஜி உங்களுக்கு ரூம் கொடுக்கலையா என்று கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து எல். முருகனுக்கு உடனே ரூம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜகவில் மீண்டும் எல். முருகன் கவனம் பெறுவதற்கான அறிகுறி இது. அதனால்தான் அவருக்கு ரூம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தனர். தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு மாற்றங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. விரைவில் பல மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.

English summary
Why does Delhi gives a room to L Murugan in TN BJP office and What is Annamalai stand?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X