ஏன் போகல? அமித் ஷாவுக்கே போனை போட்ட எடப்பாடி.. வெற்றி சிரிப்பு சிரித்த ஓபிஎஸ்.. அது யார் தோனியா?
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிர்க்கட்சி துணை தலைவர் எடப்பாடி பழனிசாமி போன் செய்து பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான 2 விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அரசியல் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது . பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையை அடுத்து அரசியலில் பல்வேறு விவாதங்கள் நடக்க தொடங்கி உள்ளன.
முக்கியமாக பாஜகவின் பூத் கமிட்டி செயல்பாடுகள், அதிமுகவுடன் மெகா கூட்டணி அமைப்பது, 2024 லோக்சபா தேர்தலுக்கான பாஜக பிளானிங் என்று பல விஷயங்கள் விவாதப்பொருளாகி உள்ளன.

பாஜக
அதோடு தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் சிலர் பாஜகவில் இணைய போவதாகவும் கூட அண்ணாமலை தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியின் இந்த தமிழ்நாட்டு பயணத்தின் போது, அவர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்தார். இரண்டு பேரையும் ஒன்றாக விமான நிலையத்திற்கு வரும்படி பிரதமர் அலுவலக தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் மட்டுமே சந்திக்க முடியும். தனி தனியாக சந்திக்க முடியாது என்று இவர்களிடம் கூறப்பட்டு உள்ளது.

தனி சந்திப்பு
அதேபோல் அமித் ஷாவை தனியாக சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் முயன்று உள்ளனர். ஆனால் இருவருக்கும் தனியாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன். நீங்களும் வேண்டுமானால் கலந்து கொள்ளுங்கள். ஆனால் தனியாக அமித் ஷாவை சந்திக்க முடியாது என்று கூறி உள்ளனர்.

சென்னை
இந்த விஷயம் தெரிந்ததும் ஓ பன்னீர்செல்வம் முதல் ஆளாக சென்னைக்கு சென்றுள்ளார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். அங்கே அமித் ஷா கையையும் குலுக்கி.. பார்த்துவிட்டேன் என்பது போல வெற்றி சிரிப்பு சிரித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு சென்றால் மீண்டும் ஓ பன்னீர்செல்வத்தை பார்க்க வேண்டும். அவருக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதால் அவர் செல்லவில்லை. அதோடு எடப்பாடிக்கு லேசான முதுகுவலி பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.

பயணம்
அன்று இரவே அவர் சென்னைக்கு பயணம் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதோடு சென்னைக்கு மழை பாதிப்புகளை பார்வையிட இன்று எடப்பாடி வருவதாக பிளான் போடப்பட்டது. அதனால் அதற்கு முன் மீண்டும் சென்னைக்கு செல்லும் திட்டம் எடப்பாடியிடம் இல்லை என்கிறார்கள். அமித் ஷா தனியாக சந்திக்க நேரம் கொடுத்தால் செல்லலாம். இல்லை என்றால் வெறுமனே கைகுலுக்க செல்ல வேண்டாம் என்று அவர் முடிவு எடுத்து இருக்கிறாராம்.

போன்
இதையடுத்தே அமித் ஷாவிடம் போனில் பேசி விவரத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். தன்னால் வர முடியாது என்று அவர் கூறி உள்ளார். இதில் ஓ பன்னீர்செல்வம் குறித்து இரண்டு பேருமே ஆலோசனை செய்து உள்ளனர். ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஓ பன்னீர்செல்வத்துடன் இணைவது பற்றி அமித் ஷா பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. தொண்டர்கள் ஆதரவு ஓ பன்னீர்செல்வத்திற்கு இல்லை என்று எடப்பாடி பேசியதாக தெரிகிறது.

எடப்பாடி தோனி
அந்த நிகழ்வில் முன் வரிசையில் ஓ பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகில் இன்னொரு பக்கம் தோனி அமர்ந்து இருந்தார். நிகழ்வின் போதுதான் தோனியை ஓ பன்னீர்செல்வம் பார்த்தார். அப்போது தோனியிடம் சிரித்தபடி ஓ பன்னீர்செல்வம் கைகுலுக்கினார். அது இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்வு ஆகும். அவர்கள்தான் சிஎஸ்கே நிறுவன ஓனர்கள் என்பதால் அந்த நிகழ்வில் தோனியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications