சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசர அவசரமாக.. வக்கீல்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. செம டென்ஷனில் சீனியர் "தலை"கள்.. பரபர அதிமுக

எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் சற்று நேரத்தில் ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருவதால் பரபரப்பு கூடி வருகிறது.
அதிமுக முழு பொறுப்பு கையில் கிடைத்தும்கூட, அதனை அனுபவிக்க முடியாத நிலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.. தற்சமயம் 2 விதமான தீர்ப்புகளை எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளார்.

முதலாவதாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி சதீஸ்குமார் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், இதை எதிர்த்து அப்பீலுக்கு ஓடினார் ஓபிஎஸ்.

அசராத எடப்பாடி.. சளைக்காத ஓபிஎஸ்.. அதிமுக பொதுக்குழு வழக்கு ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைஅசராத எடப்பாடி.. சளைக்காத ஓபிஎஸ்.. அதிமுக பொதுக்குழு வழக்கு ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

 சாவி எங்கே?

சாவி எங்கே?

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தந்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்துக்கு செக் வைத்தார்.. இந்த மனுவை தாக்கல் செய்ததுமே, எடப்பாடி பழனிசாமி பதிலுக்கு கேவியட் மனு தாக்கல் செய்தார்.. கட்சி சாவியை ஒப்படைக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.. அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தன் கருத்தையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், இதன்முடிவுகள் யாருக்கு சாதகமாக வரும் என்று தெரியவில்லை.

 தமிழ்மகன் உசேன்

தமிழ்மகன் உசேன்

நீதிமன்றம் உத்தரவுப்படி, தான் நடத்திய பொதுக்குழுவுக்கும் எடப்பாடிக்கு சிக்கல் வந்துள்ளது.. கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓபிஎஸ் இன்னொரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்தார்.. இதை சென்னை ஹைகோர்ட்டே விசாரித்து 2 வாரங்களுக்குள் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.. மேலும், வழக்கு உத்தரவு வெளியாகும் வரை, எடப்பாடி பழனிசாமி எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்..

 அப்பாயிண்ட்மென்ட்

அப்பாயிண்ட்மென்ட்

இது எடப்பாடியின் கையை மேலும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இன்றைய தினம் அந்த வழக்குதான் இன்று ஹைகோரட்டில் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, கடந்த வாரம் முதல் தெம்பாக காணப்படுகிறார்.. விறுவிறுப்பான சுற்றுப்பயணம், நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை நடத்துவது என பம்பரமாக சுழல ஆரம்பித்துவிட்டார்.. ஆனால், எடப்பாடி அப்படி இல்லை.. சமீப காலமாகவே தூக்கத்தை தொலைத்துள்ளார்.. மேலிட தலைவர்கள் தன்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் தராததுடன், பிரதமர் மோடியும் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்காததால் உடைந்து போய்விட்டார் எடப்பாடி..

 தூக்கத்தை தொலைத்தார்?

தூக்கத்தை தொலைத்தார்?

இதையடுத்து, ஓபிஎஸ் பக்கம் டெல்லி காற்று மெல்ல வீசவும், எடப்பாடி சற்று கலக்கமாகி உள்ளதாகவே சொல்கிறார்கள்.. இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஒருவேளை ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், தன்னுடைய கை மீண்டும் கட்சிக்குள் ஓங்குமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அல்லது பொதுக்குழுவில் தீர்மானங்கள் ரத்தானால், அடுத்த நகர்வு என்ன? என்றெல்லாம் எடப்பாடி தரப்பு இந்த 4 நாட்களாகவே யோசனையில் மூழ்கி வந்தன.

Recommended Video

    ADMK-க்கு இப்ப BJP எஜமானர்கள் - Senthil Balaji
     ரத்தத்தின் ரத்தங்கள்

    ரத்தத்தின் ரத்தங்கள்

    இன்று மதியம் வழக்கு விசாரணை நடக்க உள்ள நிலையில், அவசர அவசரமாக வழக்கறிஞர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. மதியம் 2 மணிக்கு மேல், பொதுக்குழு தொடர்பான வழக்கு நடக்க உள்ளதாக தெரிகிறது.. ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் டெல்லியில் இருந்து வாதாடுவதற்கு இன்று வரவுள்ள நிலையில், தன் சார்பாக என்ன மாதிரியான கருத்துக்களை, வாதங்களை முன்வைக்கலாம் என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.. நடப்பதை எல்லாம் பார்த்து ரத்தத்தின் ரத்தங்கள் கவலையில் உள்ளனர்.

    English summary
    Why does Edappadi palanisamy consult with advocates and whats o panneerselvams next move எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X