ஓகே.. அண்ணாமலையிடம் கையசைத்த நட்டா.. "ஆபத்து".. காயத்ரிக்கு போன மெசேஜ்.. மிட் நைட்டில் விலகியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் இரவோடு இரவாக வெளியேறுவதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருந்ததாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வெளியேறி இருக்கிறார். கட்சியில் அண்ணாமலையின் தலைமையை மிக கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு காயத்ரி ரகுராம் வெளியேறி உள்ளார்.

அண்ணாமலைக்கும் காயத்ரிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வந்தது. அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் காயத்ரி வைத்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் கட்சியில் இருந்தே விலகி இருக்கிறார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

காயத்ரி செய்துள்ள போஸ்டில், என்னுடைய கருத்தை சொல்ல, பிரச்னையை விசாரணை செய்ய, சம உரிமை வழங்க, பெண்களுக்கு மரியாதை வழங்க கூட முடியாத பாஜகவில் இருந்து விலகுகிறேன். அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் கட்சியில் இருந்து கிண்டல் செய்யப்படுவதற்கு கட்சியில் இல்லாமல் கிண்டல் செய்யப்படுவது மேல். கட்சி தொண்டர்கள் பற்றி யாருமே இங்கு கவலைப்படவில்லை. அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள்.

அண்ணாமலை பொய்யர் அண்ணாமலை பொய்யர்

அண்ணாமலை பொய்யர் அண்ணாமலை பொய்யர்

பிரதமர் மோடி ஸ்பெஷல் மனிதர். அவர் இந்த தேசத்தின் தந்தை. அவர் எப்போதும் என்னுடைய விஸ்வகுருவாக இருப்பார். தலை சிறந்த தலைவராக இருப்பார். அமித் ஷா எப்போதும் என்னுடைய சாணக்கிய குருவாக இருப்பார். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர். கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம். மற்றவர்களை அவமானப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது. நான் அண்ணாமலை தலைமைக்கு கீழ் இயங்க முடியாது, என்று கூறிவிட்டு காயத்ரி இந்த முடிவை எடுத்துள்ளார்.

நட்டா

நட்டா

காயத்ரி இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழ்நாடு வந்து இருந்தார்.கோவை வந்து இருந்த அவர் தமிழ்நாட்டில் பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அதன்பின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்தார். கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளுங்கள். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம், என்று கூறி இருக்கிறார்.

அண்ணாமலை பர்மிஷன்

அண்ணாமலை பர்மிஷன்

அண்ணாமலைதான் தலைவர். அவர் சொல்வதை கேளுங்கள். கட்சி பிரச்னையை பொது இடங்களில் பேச கூடாது. கட்சி பிரச்சனையை தலைவரிடம் சொல்லுங்கள். சமூக வலைத்தளங்களில் சொல்லாதீர்கள் என்று கூறி இருக்கிறாராம். அதோடு நட்டாவிடம் தனியாக பேசிய அண்ணாமலை உட்கட்சி மோதல் பற்றி பேசி இருக்கிறார். மேலும் கட்சிக்கு உள் சீனியர்கள் தனக்கு எதிராக காய் நகர்த்துவதாகவும் அண்ணாமலை பேசி இருக்கிறாராம். இதெல்லாம் போக காயத்திரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் அடங்கவில்லை. அவர் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பேசி இருக்கிறாராம்.

ஒப்புக்கொண்டார்

ஒப்புக்கொண்டார்

இதை நட்டா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது காயத்ரியை டிஸ்மிஸ் செய்ய நட்டா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் காயத்ரிக்கு நேற்று முதல்நாள் மாலை தெரிய வந்துள்ளது. நாளை உங்களை டிஸ்மிஸ் செய்ய போகிறார்கள் என்ற தகவல் அவருக்கு முக்கியமான மூத்த தலைவர் ஒருவரிடம் இருந்து சென்றுள்ளது. இதையடுத்தே பதற்றம் அடைந்த காயத்ரி கட்சியில் இருந்தே விலகும் முடிவை இரவோடு இரவாக எடுத்துள்ளார். காயத்ரி ஏற்கனவே நட்டா, அமித் ஷாவிற்கு அண்ணாமலை பற்றி 2 வாரங்களுக்கு முன் மெயிலில் புகார் அளித்துள்ளார். இதற்கு பதில் கிடைக்காத விரக்தியில் இருந்தவருக்கு டிஸ்மிஸ் தகவல் தெரிந்ததும் கட்சியில் இருந்தே விலகி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+