சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட வைத்த ஸ்டாலின்! நடுவானில் கைமாறிய பைல்.. ஆனா இப்போ ஏன் திடீர்ன்னு? அவசரமாக புறப்பட்ட ஆர்.என் ரவி?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது பல்வேறு கேள்விகளை, விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. ஆளும் திமுகவிற்கும், ஆளுநருக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆர். என் ரவியை தமிழ்நாடு திமுக அரசு எதிர்த்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன.

திரும்ப பெற கடிதம்.. ஆளுநர் ஆர்என் ரவி திடீர் டெல்லி பயணம்.. 2 நாள் பயணத்தின் பின்னணி விஷயம் என்ன? திரும்ப பெற கடிதம்.. ஆளுநர் ஆர்என் ரவி திடீர் டெல்லி பயணம்.. 2 நாள் பயணத்தின் பின்னணி விஷயம் என்ன?

திரும்ப பெற வேண்டும்

திரும்ப பெற வேண்டும்

இதுபோக மத ரீதியாக ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். மத ரீதியாக கடுமையான கருத்துக்களை அவர் பேசி வருகிறார். ஆளுநர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக அதை பின்பற்றி செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் போது அவர் சனாதனம் பற்றி பேச கூடாது. அதேபோல் இந்தியா இந்து நாடு என்று பேச கூடாது. மதம் பற்றி அவர் கருத்து தெரிவிக்கவே கூடாது. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல அவர் செயல்பட கூடாது என்பதுதான் திமுகவினர் ஆளுநருக்கு எதிராக வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

 பாஜக தலைவர்

பாஜக தலைவர்

இது போக இன்னொரு பக்கம் ஆளுநர் தமிழ்நாடு பாஜக தலைவர் போல செயல்படுகிறார் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் விமர்சனம் வைத்து உள்ளன. அதாவது பாஜக தலைவர் போல ஆளுநர் தினசரி கருத்துக்களை வைக்கிறார். மத ரீதியாக பேசுகிறார், என்றும் திமுக தரப்பு வைத்து உள்ளது. இதையடுத்தே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் ஆர். என் ரவியை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து உள்ளது. இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர். திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக கட்சிகள் எல்லாம் இதில் ஒருமித்த குரல் கொடுத்து உள்ளன.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

டெல்லியில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் முயற்சியில் குடியரசுத் தலைவருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். டெல்லியில் இரண்டு நாட்கள் அவர் இருப்பார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார். பல அமைச்சர்களை அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில்தான் ஆளுநர் ரவி டெல்லி சென்று வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் டெல்லிக்கு செல்வது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

4 காரணங்கள்

4 காரணங்கள்

அதன்படி பின்வரும் காரணங்களுக்காக ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பற்றி பேசுவதற்கு.

தென் மாநிலங்களின் சட்ட ஒழுங்கு பற்றி பேசுவதற்கு.

தமிழ்நாட்டில் தனக்கு கொடுக்கப்படும் அழுத்தம் பற்றி பேசுவதற்காகவும், குடியரசுத் தலைவருக்கு தனக்கு எதிராக அனுப்பப்பட்ட கடிதம் பற்றி பேசுவதற்கு.

கடைசியாக, தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கும் 20 மசோதாக்களில் எதை எல்லாம் நிறைவேற்றலாம் என்பது பற்றி பேசுவதற்காக ஆளுநர் டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சமீபத்தில்தான் ஆளுநர் ரவி முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை பிரதமர் மோடியிடம் கொடுத்ததாக கூறப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அப்போது மதுரையில் இருந்து பிரதமர் மலடி ஹெலிகாப்டரில் தனியாக திண்டுக்கல் செல்வதாகவும். இந்த சந்திப்பில்தான் நடுவானில் முக்கிய பைல் ஒன்று கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பற்றிய பைல் இது என்கிறார்கள். ஆளுநர் ஆர். என் ரவி உள்துறையில் அனுபவம் கொண்டவர் என்பதால், உள்துறை தொடர்பான முக்கியமான சில உளவு தகவல்கள் அடங்கிய பைலை கொடுத்தார் என்று கூறப்படுகிறது. அதோடு கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாகவும் முக்கிய விவரங்கள் அடங்கிய கோப்புகள் இதில் இருந்ததாக கூறப்படுகிறது.

English summary
Why does Governor R N Ravi go to Delhi again amid DMK move against him?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X