டிரம்ப் போட்ட ரூல்ஸ்.. அடிபணிய மறுத்த இந்தியா.. மீட்டிங்கில் இருந்து வெளியேற்றம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியவில்லை, அமெரிக்காவின் வரி அழுத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது, பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு இந்தியா வெளியேறிவிட்டது, என்று இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

இந்த நிலையில்தான் இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவைத் தொடர்ந்து விமர்சிப்பதைத் "அரசியல் நாடகம், பொருளாதார யதார்த்தம் அல்ல" என்று கூறியுள்ளார்.

Why does India not succumb to the US President Donald Trump s tariffs

ரஷ்யா - இந்தியா எண்ணெய் வியாபாரம்

அதில், ரஷ்ய எண்ணெயை இந்தியா அதிக விலைக்கு வாங்குகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் ரஷ்யா மூலம் இந்தியா பெரிதாக பலன் அடையவில்லை. ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே, 25 பில்லியன் டாலர் அல்ல என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவை சீண்டும் விதமாக டிரம்ப் தீவிரமாக செயல்படுத்துகிறார். ரஷ்யா எண்ணெய் மூலம் நாம் பெரிதாக பலன் அடையவில்லை. ஆனால் டிரம்ப் இதை இந்தியாவைத் தண்டிக்கும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். ரஷ்யன் கச்சா எண்ணெயின் கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் கலப்புச் செலவுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியாவிற்கு ஒரு பீப்பாய்க்கு வெறும் $3-4 தள்ளுபடி மட்டுமே கிடைக்கிறது.

டிரம்ப் இதை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்த விரும்பினால், அவர் எந்த புள்ளிவிவரத்தையும் எடுக்கலாம். உண்மை என்னவென்றால், இந்தியா ரஷ்ய எண்ணெயை உலகளாவிய விலைக் கட்டுப்பாடு கட்டமைப்புக்குள் வாங்குகிறது. எந்த சர்வதேச ஒப்பந்தமும் மீறப்படவில்லை.

இதனால்தான், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியவில்லை, அமெரிக்காவின் வரி அழுத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது, பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு இந்தியா வெளியேறிவிட்டது என்று இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இந்தியா ஒப்பந்தம்

இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டிற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளும், அமெரிக்காவுடன் இந்தியா மற்றும் சீனாவிற்கு மோதல் நிலவும் சூழலில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.தியான்ஜினில் நடைபெறும் வருடாந்திர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை சீனா சென்றடைந்தார். இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கால்வான் மோதலுக்குப் பிறகு, ஏழு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை.

பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், "இன்று உலகம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் மாற்றங்களால் சூழப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் நிலையற்றதாகவும் குழப்பமானதாகவும் உள்ளது. இந்த ஆண்டு சீனா-இந்தியா இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு விழாவாகும். இரு தரப்பினரும் நமது உறவை ஒரு மூலோபாய உயரத்திலும் நீண்டகால கண்ணோட்டத்திலும் அணுக வேண்டும்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+